Subscribe Us

header ads

மலேசிய விமான விபத்தை முன்கூட்டியே தெரிவித்தாரா நெதர்லாந்து பிரஜை? உலகத்தை ஈர்த்த பேஸ்புக் படம்


மலேசிய விமான விபத்தை முன்கூட்டியே தெரிவித்தாரா நெதர்லாந்து பிரஜை? உலகத்தை ஈர்த்த பேஸ்புக் படம்
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச்- 370 விமானம் மாயமானதைக் குறிப்பட்டு நான் பயணம் செய்யவிருக்கும் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமும் காணாமல் போனால் எப்படி இருக்கும் என்று கூறி தனது கடைசி பயணத்தின்போது ட்விட்டரில் ஜோக் அடித்த பயணி, கடைசியில் மரணத்தைத் தொட்ட சோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
421359_182572141880289_1052285609_n
ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச் 17 விமானத்தில் பயணித்த நெதர்லாந்தைச் சர்ந்த “கார் பான்” என்ற பெயருடைய அந்த பயணி தனது ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் பதிவு செய்த கருத்து இன்று உண்மையாகி அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், உறவுகளையும் பெரும் சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது. கார் பான் விடுமுறைக்காக மலேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் ரஷ்ய எல்லையில் வைத்து இந்த விமானத்தை சுட்டு வீ்ழ்த்தி விட்டனர்.
தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் கார் பான் கூறுகையில், இந்த விமானம் காணாமல் போனால் எப்படி இருக்கும்.. என்று ஜோக்காக கூறியிருந்தார்.
1510868_714074915283371_2104201055_n
மேலும் தான் ஏறவிருந்த அந்த சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் படத்தையும் அவர் போட்டுள்ளார் கார் பான். ஷிபோல் விமான நிலையம் அருகே என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது கார் பான் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு அத்தனை பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால் இவர் போட்ட இந்தப் படமும், ஜோக்கும் இப்போது வைரலாக பேஸ்புக்கில் பரவி வருகிறது. பலரும் இந்த ஜோக்கைப் பார்த்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்தப் புகைப்படம் தற்போது 10 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரிலும் இது வைரல் போல பரவி வருகிறது.

Post a Comment

0 Comments