டுபாயில் நான்கு வயது சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இலங்கை
பிரஜை ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடன் காரணத்தினால் டுபாய் பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்
காரணத்தினால் அவரின் மனைவி தனது 4 வயது குழந்தையை கைவிட்டு சென்றுள்ளதாக
மற்றுமொரு இலங்கையர், அந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு
பிரிவின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக டுபாய் பொலிஸார் தெரிவித்தனர்
சிறுமியின்
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்நாட்டு நீதி மன்றம் குறித்த இலங்கையர்
செலுத்த வேண்டிய கடன் தொகையை வங்கிக்கு செலுத்தியுள்ளதுடன் அவரை தடுப்பு
காவலில் இருந்து விடுவித்துள்ளதாக டுபாய் மனித உரிமை திணைக்களத்தின்
பணிப்பாளர் பிரிகேடியர் மொஹமட் அல் மூர் தெரிவித்துள்ளார்.
மேலும்
அவர் தனது மகளுடன் இலங்கைக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டுகளை இலவசமாக
வழங்கியுள்ளதுடன், அவர் இலங்கையை சென்றடையும் வரை அவரது செலவுக்கு தேவையான
பணத்தினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து,
மனைவியால் கைவிடப்பட்ட தனது 4 வயது குழந்தையுடன் சேர்ந்து வாழ்வதற்கு
குறித்த இலங்கையருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்
தெரிவித்துள்ளது.
டுபாயில் அண்மையில், மாற்றியமைக்கப்பட்ட விளக்கமறியல் சட்டங்களுக்கு அமைவாக குறித்த இலங்கையர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
0 Comments