ஐ.எஸ்.ஐ.எஸ் ஜிஹாத் இயக்கத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கலீஃபா ஆட்சிக்குட்பட்ட தனிநாடாக பிரகடனம் செய்த பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அழித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க வடக்கு ஈராக் மற்றும் சிரிய எல்லைப் பகுதிகளை இணைத்து இஸ்;லாமிய நாடாக (இஸ்லாமிக் ஸ்டேட்) ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் சுன்னி முஸ்லிம் ஜிஹாதிகளால் கடந்த மாதம் பிரகடனம் செய்யப்பட்டது, இந்நிலையில் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மொசூல் நகரிலுள்ள இஸ்லாமியர்களின் அடையாளங்களாகவுள்ள சுன்னி முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உட்பட 6 சியா முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மற்றும் சிறப்புவாய்ந்த சில சிறிய மத ஸ்தலங்களையும் புல்டோஸர் மற்றும் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.

அத்துடன் அவ்விடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் (தற்போது ஐ.எஸ்) தமது கறுப்புக்கொடியினையும் பறக்கவிட்டுள்ளதாக உள்ளுர்வாசிகளை மேற்கோள்காட்டி ஏ.ஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் அப்பகுதி வாழ் மக்களால் வெளியிடப்பட்டுள்ளன.
எமது வம்சாவளியினமிருந்து பெற்றுக்கொண்ட இந்த மத ஸ்தலங்களின் அழிப்பு பெரும் வருத்தமளிக்கிறது. அவை நகரின் அடையாளச் சின்னங்கள் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ் கலீஃபாவாக அறிவிக்கப்பட்டுள்ள கலீபா இப்றாஹிம் என தன்னைத் தானே அழைக்கும் அல் பக்தாதி மக்கள் முன்னிலையில் தோன்றிப் பேசியுள்ளார். இவரது நிழற்படங்களோ அல்லது வீடியோவொ வெளிவருவது மிகக் குறைவு.
அல்லாஹ்வுக்காக ஜிஹாத் அழைப்பு விடுத்துள்ள ஐ.எஸ் கலீஃபா அங்கு பேசுகையில், "நான் உங்களை பாதுகாப்பவனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் உங்களை விட சிறந்தவனல்ல. எனவே என்னை நீங்கள் சரியானவனாக இனங்கண்டால் எனக்கு உதவுங்கள் அத்துடன் தவறானவனாக இனங்கண்டால் அறிவுரைகூறி என்னை நல்வழிப்படுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice

0 Comments