Subscribe Us

header ads

இஸ்ரேல் கொடியைத் தூக்கியெறிந்த – ரொனால்டோ


“கொலைகாரர்களுடன் எனது மேலங்கியைப் பரிமாறிக்கொள்ள மாட்டேன்” – ரொனால்டோ கூறினார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், போர்த்துக்கல் அணிக்கும் இஸ்ரேல் அணிக்கும் இடையில் நடைபெற்ற சிநேகபூர்வ போட்டியின் போது போர்த்துக்கல் அணியில் விளையாடிய நட்சத்திர ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாறு கூறினார்.
கால்பந்தாட்ட போட்டியொன்று முடிவுற்றதும் விளையாட்டு வீரர்கள் தமது மேலங்கிகளை பரிமாறிக்கொள்ளும் போது, இஸ்ரேல் ஆட்டக்காரர் ஒருவர் இஸ்ரேல் கொடி பொறிக்கப்பட்ட தனது மேலங்கியைக் கொடுத்த போது அதனைப் பெற்றுக்கொள்ள ரொனால்டோ மறுத்துவிட்டார். இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, “நான் எனது மேலங்கியை கொலைகாரர்களுடன் பரிமாறிக்கொள்ள மாட்டேன்” (I do not exchange my shirt with murderers) எனக் கூறினார்.
பலஸ்தீனர்களுடனான தனது சினேகபூர்வ அன்பை சர்வதேச நட்சித்தர கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ வெளிப்படுத்திய சந்தர்ப்பங்களில் இது முதலாவது அல்ல. கடந்த வருடம் தனது தங்கத்தினாலான கால்பந்தாட்ட சப்பாத்தை இஸ்ரேல் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன் மக்களுக்கு உதவுவதற்காக ஏலத்தில் விற்பனை செய்தார்.
படத்தில்:

பலஸ்தீன் கொடியுடன் ரொனால்டோ. ‘அனைவரும் பலஸ்தீனுடன்’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: Muslimvillage,com
தமிழில்: Hisham Hussain, Puttalam

நன்றி :  The Puttalam Times 

 ✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice

Post a Comment

0 Comments