எதிர்வரும் 2014.08.02 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் சாஹிரா தேசிய கல்லூரியின் பாடசாலை வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணி நடைபெறும் என பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாகுப் தெரிவித்தார்.
இச் சிரமதானத்தில் கலந்துகொள்ளுமாறு பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றார் குழுக்கள், பழைய மாணவர் சங்கம், சாஹிராவின் (பழைய மாணவ) வாலிப அணியினருக்கு அவர் திறந்த அழைப்பு விடுக்கின்றார்.
ரமழான் மாத நீண்ட விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படும் முதல் நாள் கற்றல் - கற்பித்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில்** எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, இச் சிரமதானப் பணியில் முழுமையான பங்களிப்பை வழங்குமாறு புத்தளம்வாழ் அனைவரையும் அவர் கேட்டுக்கொள்கின்றார்.
தகவல் மூலம்: @Valikaatti (twitter)
படங்கள்: Google (image)
**கலந்துரையாடல் தொடர்பான பதிவின் இணைப்பு:
https://www.facebook.com/theputtalamtimes/photos/a.726660884030320.1073741828.726394477390294/906500922712981/?type=1Thanks: The Puttalam Times


0 Comments