கேள்வி: ரமளானின் பொழுது வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளலாமா?
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ரமளானில் வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வது, நோன்பை எந்தவிதத்திலும் பாதித்து விடாது. ஃபதாவா அல் லஜ்னா அல்-தாஇமா (ஃபதாவா - மார்க்கத் தீர்ப்புகளுக்கான சிறப்பு கமிட்டி) கூறுவதாவது: அனைத்து வித வாசனைகளும், பொதுவாக நறுமணங்களும், அவை அத்தர் அல்லது அது போன்றவைகளும், நோன்பை எந்தவிதத்திலும் பாதிக்காது அல்லது இன்னும் மற்ற நேரங்களில் அணிந்து கொண்டாலும், அதாவது அந்த நோன்பு கடமையான நோன்பாக இருந்தாலும் அல்லது கடமையல்லாத விரும்பி நோற்கப்படும் நஃபிலான நோன்புகளாக இருந்தாலும் சரி.
இந்தக் கமிட்டி மேலும் கூறுவதாவது: எந்தவிதமான வாசனைத் திரவியங்களை ரமளான் மாதத்து நோன்பு நாளில் எவர் அணிந்து கொண்டாலும் அது அவரது நோன்பை பாதிக்காது, ஆனால் அவர் அதன் நறுமணப் புகையை அல்லது கஸ்தூரி போன்ற வாசனைத் துகள்களை (மூக்கிற்கு அருகில் வைத்து) நுகர்ந்து உள்ளிழுத்தல் கூடாது.
Fataawa al-Lajnah al-Daa’imah, 10/271
ஷேக் இப்னு உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: வாசனைத் திரவியங்களைப் பொறுத்தவரையில், நாளின் ஆரம்பத்திலும் மற்றும் நாளின் முடிவிலும் இட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட்டதே, அந்த வாசனைத்திரவியம் நறுமணப் பொருளாகவோ அல்லது எந்த நிலையில் இருந்தாலும் சரியே, நறுமணப் புகையை நுகர்வது அனுமதிக்கப்பட்டதல்ல ஏனென்றால் நறுமணத்தில் உள்ள துகள்களை (மூக்கினால் உறிஞ்சுவது மற்றும்) நுகர்வதன் காரணமாக அவை மூக்கின் வழியாக வயிற்றுக்குள் சென்று விடலாம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லகீத் இப்னு ஸப்ரா என்பவரிடம் கூறினார்கள் : ''உங்களது மூக்கினை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் நோன்பாளியாக இருக்கும்பட்சத்தில்".
அல்லாஹ் மிக அறிந்தவன்.
Fataawa Arkaan al-Islam, p. 46.


0 Comments