Subscribe Us

header ads

தீயிலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள நல்ல உள்ளங்கள் (படங்கள் இணைப்பு)

மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ கொடபிட்டிய பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த வீட்டைச் சேர்ந்த பெண்ணும் இன்னொரு உறவினரும் நில்வளா கங்கையில் புடவைகளைத் துவைக்கச் சென்றிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் பொருட்டு அதனைக் சூடாக்குவதற்காக மூட்டப்பட்டிருந்த அடுப்பிலிருந்த தீ பரவியே அந்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்த போது அந்த வீட்டில் ஆறு மாத குழந்தையும் இன்னும் இரு சிறுவர்களுமே இருந்துள்ளனர். தீ பரவுவதனைக் கண்ட அந்த வீட்டின் அக்க, பக்கங்களிலிருந்த சிங்களவர்கள் உடனடியாக அங்கு சென்று தீயையும் அணைத்து குழந்தை, சிறுவர்களையும் காப்பாற்றியுள்ளனர்.

-தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் படமும் செய்தியும் லங்கா தீப இணையம் (நன்றி)






Post a Comment

0 Comments