Subscribe Us

header ads

என்றாவது ஒரு நாள் உண்மை ஜெயிக்கும் - விஜித தேரர்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

என்றாவது ஒரு நாள் உண்மை ஜெயிக்கும். கடந்த 13 நாட்களாக சோறும் சம்பலும் சாப்பிட்டு சிறைச்சாலையில் பாதுகாப்பாக இருந்தேன்.

கடந்த ஓராண்டு காலமாக எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 20ம் திகதி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜூன் மாதத்தில் இந்த பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது என வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

போலியாக தம்மைத் தாமே தாக்கிக் கொண்டு முறைப்பாடு செய்ததாக வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக பாணந்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விஜித தேரர்  நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தலா 50,000 ரூபா இரண்டு சரீரப் பிணை மற்றும் 10,000 ரூபா ராக்கப் பிணை ஆகியவற்றின் அடிப்படையில் வட்டரக்கே விஜித விடுதலை செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments