ரூசி சனூன் புத்தளம்
வழமை போன்று இவ்வருடமும் புத்தளம் நகர முதல்வர் கே. ஏ. பாயிஸ்
ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) மாலை
புத்தளம் நூமான் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புத்தளம் நகரின் எதிர்கால அபிவிருத்திகள் மற்றும் பாதுகாப்பு
தொடர்பாக புத்தளம் நகர முதல்வர் கே. ஏ. பாயிஸ் இங்கு சிறப்பு உரை
நிகழ்த்தினார்.
நன்றி: Puttalam Online



0 Comments