Subscribe Us

header ads

பலஸ்தீனம் எங்கள் புனித பூமி எங்கள் நபிமர்கள் பலர் உதித்து உதிர்ந்த இடம் !



இஸ்ரேலே!
அமெரிக்காவே !
நீ எத்தனை உயிரை பறித்தாலும்
ஏன் ?
பலஸ்தீனத்தில் ஒரு முஸ்லிமுமின்றி ஒழித்தாலும்.
நீ
என்ன தான் செய்தாலும்
உங்களால் எதையும் பிடுங்க இயலாது.
எங்கள் நபியின் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது
எங்கள் புனித பூமியை மீட்கும் வரை அங்குள்ள புற் பூண்டும் உனக்கெதிராய் போரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
எங்களைக் கொன்று
நீ
வெற்றியடைந்து விட்டதாக மமதை கொள்ளாதே!
எங்களை சுவனத்து சுவையை இலகுவில் சுவைக்கச் செய்கிறாய்
நாங்கள் இப் பூமியில் வாழப் பிறந்தவர்கள் அல்ல
மறுமைக்கானவர்கள்
நாங்கள் எங்கள் உயிரை இஸ்லாத்திற்காய் கொடுக்க ஒரு போதும் தயங்க மாட்டோம்
எங்கள் சகோதரர்களின் உயிர் பறிக்கப்பட்டால் தாங்கவும் மாட்டோம்.

Malhar Moulavi

Post a Comment

0 Comments