Subscribe Us

header ads

சப்புகஸ்கந்தை ஆய்வு விவகாரம் ; ஐ.தே.கவினருக்கு எதிர்ப்பு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆராய்வதற்காக, ஐக்கிய தேசிய கட்சியின் குழு ஒன்று இன்று (17)காலை குறித்த நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டபோது, அங்கு அவர்களை உள்ளே செல்ல விடாது பாதுகாப்புப் பிரிவினரும்,பணியாளர்களும் தடுத்திருப்பதாக ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவிக்கிறார்.

இதேவேளை,கொழும்பு துறைமுகத்தில் இருந்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வரையில் எண்ணெயை எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில், அந்த பகுதியில் நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிய எண்ணெய் வளத்துஐற அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் வழியாக எண்ணெயை கொண்டு செல்லும் குறித்த குழாயில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் வெடிப்பு ஏற்பட்டது.

இந்த குழாய் திருத்தப்பட்ட போதும், மீண்டும் மீண்டும் அதில் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றமையால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள தடை ஏற்பட்டுள்ளது.

வெடிப்பு ஏற்பட்டுள்ள குழாயின் பிணைப்பினை ஆராய்வதற்காக, அமைச்சர் அனுரபிரியதர்சன உள்ளிட்ட குழு ஒன்று கடந்த தினம் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள கூடியதாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா, விரைவில் குறித்த பிணைப்பினை சீர்த்திருத்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments