Subscribe Us

header ads

நான் பதவி விலக்க முன், நீங்களே ராஜினாமா செய்யமுடியும் - ஹக்கீமுக்கு கூறிய மஹிந்த

(Gtn)

விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விருப்பம் இல்லாமல் எவரும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காலில் இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் பதவி விலக்குவதற்கு முன்னதாக தாங்களாகவே பதவிகளை ராஜினாமா செய்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments