ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ள இன்று வியாழக்கிழமை, 17 ஆம்
திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதற்காளை அழைப்பிதழ் பல
தரப்பட்டவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்தவருடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ
இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். எனினும் இந்த வருடம் அவர்
இப்தார் நிகழ்வு எதனையும் நடாத்தவில்லை என அறியவருகிறது.
அதேவேளை இன்று வியாழக்கிழமைதான் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகமும் இப்தார்
நிகழ்வொன்றை முன்னதாக ஏற்பாடு செய்திருந்தது. எனினும் குறித்த தினத்தில்
மஹிந்த ராஜபக்ஸவும் இப்தாரை ஏற்பாடு செய்திருந்தமையால் பாகிஸ்தான் தூதரகம்
தனது இப்தார் நிகழ்வை மற்றுமொரு தினத்திற்கு மாற்றியுள்ளது.
இதேவேளை காஸாவில் இப்தார் இன்றியே மடிந்துபோகும் எமது உறவுகளின் அவலங்கள்
தொடரும் நிலையிலும், முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம கலவரத்தில் காயங்கள்
இன்னும் ஆறாத நிலையிலும் மஹிந்த ராஜபக்ஸவின் இப்தார் நிகழ்வில்
பங்குகொள்ளவுள்ள முஸ்லிம்கள் தொடர்பில், முஸ்லிம் சமூகம் தனது கவனத்தை
திருப்பியுள்ளது..!


0 Comments