Subscribe Us

header ads

32 பல்லுக்கு பதில் 322 பல்.... உடல் நடுங்க வைக்கும் சிறுவனின் அவலம்!....(படஙகள் , வீடியோ இணைப்பு)

மஹாராஷ்ட்ராவில் 10ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்திருந்த 232 பற்களை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

மராட்டிய மாநிலம் புல்தானா பகுதியை சேர்ந்த ஆஷிக்கி கவாய் (17), அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாடையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆஷிக்கி கவாயை கடந்த சில தினங்களுக்கு முன் அவரது பெற்றோர் மும்பையில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சிறுவனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், இரு தாடை பகுதியிலும் சதைப்பற்றுக்கு பதிலாக 232 பற்கள் நிறைந்து காணப்பட்டுள்ளன.

இதையடுத்து, தாடை பகுதியில் வளர்ந்துள்ள கூடுதலான பற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்து 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், 6 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் போது தாடை பகுதியில் சிறிதும், பெரிதுமாக இருந்த 232 பற்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த மாணவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





Post a Comment

0 Comments