Subscribe Us

header ads

உலக கோப்பை கால்பந்து: ஈரானை வீழ்த்தியது அர்ஜென்டினா

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் ஈரானும் மோதிக் கொண்டன். தொடக்கம் முதலே பந்து அர்ஜென்டினா வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கட்டுண்டு கிடந்தது.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த டி மரியாவுக்கு ப்ரீ கிக் வழங்கப்பட்டது.  அவர் அந்த பந்தை கோலாக மாற்ற தவறினார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ரெசா பவுல் ஆனார். பின்னர் ஈரானை சேர்ந்த டெஜாகாவுக்கு 42வது நிமிடத்தல் கார்னர் கிக் கிடைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டம் முழுவதும் கோல் விழாத நிலை ஏற்பட்டது.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 47வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் காகோவிற்கு கார்னர் கிக் கிடைத்தது. ஆனால் அவர் அதை கோலாக மாற்ற தவறினார்.

ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ஈரான் அணியின் நெற்குணத்திற்கு மஞ்சய் அட்டை காணப்பட்டது. இதன் பின் நீண்ட நேரத்திற்கு கோல் எதுவும் விழாத சூழ்நிலையில், கடைசியாக ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் அருமையான கோல் அடித்த அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் தோல்வியடைய காரணமாக இருந்தார். மேலும் மெஸ்ஸியே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Post a Comment

0 Comments