Subscribe Us

வெங்­காயப் பூவில் மறைந்திருக்கும் மருத்­துவக் குணங்கள்

சுவைக்­காக மட்­டு­மின்றி வெங்­காயம் வியக்­கத்­தக்க மருத்­துவ ரீதி­யா­கவும் பயன்­ப­டு­கி­றது. நன்கு வளர்ந்த வெங்­காயம் சமை­யலுக்கு எவ்­வாறு உத­வு­கி­றதோ அதே­போல வெங்­காயச் செடியில் உள்ள பூக்­களும் மனி­தர்­களின் நோய் போக்கும் மருத்­துவ குணம் கொண்­ட­வை­யாகும்.
 
*வெங்­கா­யத்­தையும், வெங்­கா­யப்­பூ­வையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பரு­கி­வர காசநோய் குண­ம­டையும்.
 
*வெங்­கா­யப்­பூக்­க­ளையும் வெங்­கா­யத்­தையும், பொடி­யாக நறுக்கி தயிரில் ஊறப்­போட்டு சாப்­பிட மூலம் தொடர்­பு­டைய எரிச்சல், குத்தல் குண­ம­டையும்.
 
*கண்­நோயால் பாதிக்­கப்­பட்டு பார்வை மங்­க­லாக இருப்­ப­வர்கள் வெங்­கா­யப்­பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்­களில் விட்டு வர மூன்று நாட்­களில் கண்­பார்வை தெளி­வ­டையும்.
 
*பல்­வ­லியால் அவ­திப்­ப­டு­ப­வர்கள் சம அளவு வெங்­காயம் மற்றும் வெங்­கா­யப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்­கொப்­ப­ளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்­பு­டைய நோய்கள் குண­ம­டையும்.
 
*ஒரு கைப்­பி­டி­ய­ளவு வெங்­கா­யப்பூ எடுத்து பொடிப்­பொ­டி­யாக நறுக்கி ஒரு சட்­டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்­றவும். வெங்­கா­யப்பூ நன்­றாக வெந்­த­வுடன் இறக்கி ஆற­வைத்து சிறி­த­ளவு உப்பு சேர்த்து உட்­கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
 
*வெங்­காயம் சேர்த்து சமைக்கும் உண­வு­களில் வெங்­கா­யத்­திற்கு பதி­லாக வெங்­கா­யப்­பூ­வையும், வெங்­கா­யத்­தா­ளையும் சிறி­யதாய் நறுக்கிப் போட்டு சேர்க்­கலாம். இது பசியை தூண்டும்.
 
*குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.

Post a Comment

0 Comments