Subscribe Us

header ads

வீட்டுக் கூரையின் மேலேறி உணவு தேடிய மாடு

பசுவொன்று  உணவு தேடிச் சென்று வீடொன்றின் கூரையில் சிக்கிக் கொண்ட சம்பவம் சுவிட்ஸர்லாந்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சுவிஸ் தலைநகரான பேர்னுக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீடொன்றில் இச்சம்பவத்தை சைக்கிளோட்டி ஒருவர் அவதானித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இது குறித்து  ரோல்ப் ஸ்டெய்னர் எனும் மேற்படி நபர் தெரிவிக்கையில,; வீடொன்றின் கூரையில்  பசுமாடு ஒன்று  நிற்பதை பார்து பெரும் வியப்படைந்தேன். எனது கண்களை நம்ப முடியாமல் இருந்தது.' எனத் தெரிவித்துள்ளார்.

சில கூரையோடுகளை உடைத்த பின்னர் அப்பசு கீழிறங்கியது.  இது குறித்து பண்ணை உரிமையளாரான டெய்டர் முல்லர் கூறுகையில், 'அப்பசு எப்போதுமே தனது இஷ்டம் போலவே செயற்படும். நான் விரும்புவதன்படி செயற்படாது' எனக் கூறினார்.

Post a Comment

0 Comments