Subscribe Us

பேரீச்சை பழ அறுவடை...

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சை மரங்கள்  காய்த்து பழமாகியுள்ள நிலையில், இதற்கான அறுவடையை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்க்கிழமை (24)  ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் சவூதி அரேபிய நாட்டு முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி பிரதான வீதியில் 2010ஆம் ஆண்டு  நடப்பட்டுள்ள  மேற்படி பேரீச்சை மரங்கள்  ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் காய்த்து பழமாகிக்  குலுங்குகின்றன. இங்கு 80 பேரீச்சை மரங்கள் உள்ளன. (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கான்)

நன்றி: தமிழ்மிரர்.





Post a Comment

0 Comments