இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இலங்கை அணி மீண்டும் தாம் ‘ஆசியாவின் சிங்கங்கள்’ என்பதை நிரூபித்துள்ளது.
இறுதி டெஸ்ட் போட்டியின், நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரின் 5ஆவது பந்து வீச்சில் இலங்கையின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை மிகுந்த போராட்டத்தின் மத்தியில் இலங்கை அணி முதல் முறையாக கைப்பற்றிக் கொண்டது.
350
ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு நேற்றைய தமது இறுதி நாள் ஆட்டத்தை
ஆரம்பித்த இங்கிலாந்து, 5 விக்கெட்கெட்டுக்கள் மாத்திரம் கைவசம் இருந்த
நிலையில் 293 ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
இங்கிலாந்து சார்பில் மொயின் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின்
தோல்வியை தவிர்க்க போராடினார் எனினும் அவரது போராட்டம் வீணானது.
இங்கிலாந்து
அணியின் பின்வரிசை வீரா்கள் இலங்கை அணியின் வெற்றியை தாமதப்படுத்தும்
வகையில் தமது ஆட்டத்தை கொண்டு சென்றனர். இறுதி 5 விக்கெட்டுக்களையும்
வீழ்த்துவதற்கு இலங்கை அணிக்கு மொத்தமாக 543 பந்து வீச்சுகள் தேவைப்பட்டன.
இங்கிலாந்து
அணி சார்பில் ரூட் 31 ஓட்டங்களையும், பிரயா் 10 ஓட்டங்களையும், ஜோர்டன் 21
ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அதேவேளை புரோட் மற்றும் அன்டர்சன் ஓட்டங்கள்
எதனையும் பெறாத போதிலும் மொத்தாக 79 பந்துகளை சந்தித்து இலங்கை அணியின்
வெற்றியை தாமதப்படுத்தினா். இதில் ஜேம்ஸ் அன்டர்சனின் ஆட்டம் அதிக பந்து
வீச்சுக்களை சந்தித்து பெறப்பட்ட இரண்டாவது அதி சிறப்பானதாகும்.
தனது
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய மொயின் அலி தனது கன்னிச் சதத்தை
பூர்த்தி செய்து 281 பந்து வீச்சில் 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர்
385 நிமிடங்கள் ஆடுகளத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் மதிய போசன இடைவேளையுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி இறுதி ஓவர் வரை நீடித்தது.
இறுதி
ஓவரை வீசிய எரங்கவினால் வீசப்பட்ட பவுன்சர் பந்து மூலமாக அன்டர்சன்
ஆட்டமிழப்புச் செய்யப்பட்டார். இதன் மூலம் அனைத்து விக்கெட்டுக்களையும் 249
ஓட்டங்களை மாத்திரமே இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்டது. இதனால் 100
ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
போட்டியின்
நாயகனாக சதம் பெற்று அணியை சரிவிலிருந்து மீட்ட அஞ்சலோ மெத்யூஸும்
போட்டித் தொடரின் நாயகர்களாக மெத்யூஸ் மற்றும் அன்டர்சனும் தெரிவு
செய்யப்பட்டனர்.
டெஸ்ட் தோல்வியினை அடுத்து முதல் முறையாக இங்கிலாந்து அணி டெஸ்ட் தர வரிசையில் 5ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது.
இங்கிலாந்துக்கு
கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி இருபதுக்கு-20, ஒரு நாள்
மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களையும் வெற்றி கொண்ட நிலையில் நாடு
திரும்பவுள்ளது.


0 Comments