Subscribe Us

விபத்துக்குள்ளான தேரருக்கு உதவிய முஸ்லிம்கள்

- இக்பால் அலி -



கண்டி குருநாகல் வீதியில் அமைந்துள்ள பறகஹதெனிய பிரதேசத்தில் ஜீப் வண்டியும் வேன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.


மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் ஜீப் வண்டியொன்றும் பௌத்த சமயத் தேரருடன் சென்ற வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தின் போது எவருக்கும் எவ்வகையான காயங்களும் ஏற்பட வில்லை. எனினும் இரு வாகனங்களும் கடுமையான சேதமடைந்துள்ளது.


இந்த சந்தர்ப்பத்தில் மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் மற்றும் ஊர் இளைஞர்கள் ஒன்றிணைந்து அவ்வேனில் வருகை தந்த பௌத்த தேரர் உட்பட அதில் வருகை தந்தவர்களுக்கு தேவையான மனிதாபினமான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற் கொண்டனர்.


இந்த வேனில் வருகை தந்தவர்கள் யாவரும் கண்டி தலாதா மாளிகைக்கு அவரசமாக ஜனாதிபதியினுடைய கூட்டம் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்று பௌத்த சமயத் தேரர் முஹமட் ரிபாழிடம் கூறியதை அடுத்து அவர் தம் சொந்த செலவில் வாடகைக்கு வாகனம் ஒன்றை அமர்த்தி அவர்களை கண்டி செல்வதற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது.


இதன் போது பௌத்த சமயத் தலைவர் இவர்களிடம் பின்வருமாறு கருத்தினைத் தெரிவித்துள்ளார்:
நாங்கள் அனைவரும் மனிதர்கள், நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். நீங்கள் செய்த உதவியை எங்களுடைய ஊர் நிகாயாவில் தெரிவிப்பேன். உங்களுடைய உதவியை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என்று அந்த பௌத்த தேரர் தெரிவித்தார்.


இவ்விடத்தில் உடன் விஜயம் செய்த மாவத்தகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேச பந்து ‘ இரு இனங்களுக்கிடையே இவ்வாறான நல்லிணக்கமான காரியங்கள் இடம்பெறுவதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம’; என்று அவர் இந்த இளைஞர்கள பார்த்து நன்றி தெரிவித்தார்.


இந்த சந்தர்ப்பத்தில் இந்தப் பகுதியில் அளுத்கமை, தர்காடவுன், பேருவளை ஆகிய இடங்களில் வன்முறைச் சம்பங்களுக்கு எதிராக கடையடைப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-நன்றி டெய்லிசிலோன்-


pikku2

Post a Comment

0 Comments