அமைச்சர் ரிசாத் பதியுதீன் நாளை நாடுதிரும்ப உள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. உத்தியோகபூர்வ விஜயமாக மத்திய கிழக்கு
நாடுகளுக்குச் சென்ற அமைச்சர்; தனது பயணத்தை ரத்து செய்து விட்டு நாளை நாடு
திரும்புகின்றார்.
அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்
தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை
மேற்கொள்ளாததன் காரணமாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து
செய்துவிட்டு நாளை நாடு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அளுத்கமைச் சம்பவம் தொடர்பில் சவூதியிலிருந்தவாறு முஸ்லிம்களுக்கு உரிய
பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகளை
தொடர்பு கொண்டு அமைச்சரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அளுத்கமையில் பிக்குவை தாக்கினார் என கைது செய்யப்பட்ட இளைஞர்களை
ஊர்வலமாக வீதியில் அழைத்து செல்வதற்கு பேரீனவாதிகளினால் எடுக்கப்பட்ட
முயற்சி தொடர்பில் வெளிநாட்டில் இருந்தாவாறு பொலிஸ்மா அதிபருடன் பேசி
பேரீனவாதிகளின் முயற்சி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பேரீனவாதிகள்
அடக்குமுறைகளை பிரயோகிப்பதன் காரணமாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடனடியாக
நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments