Subscribe Us

மேலைத்­தேய மருத்­து­வத்தில் சுகப்­ப­டுத்த முடி­யாது என கைவி­டப்­பட்ட சில நோய்­க­ளையும் யூனானி மருத்­துவத்தில் குணப்­ப­டுத்­தலாம்: டாக்டர் ஏ.எல்.எஸ்.ரஸானா

மருத்­து­வத்­ துறையில் ஆங்கில மருத்­துவம், சித்­த ­ம­ருத்­துவம் என பல சிகிச்சை முறை­களை  நோயாளிகள் பெற்று ­வ­ரு­கின்­றனர். இவற்றுள் யூனானி மருத்­து­வமும் ஒன்­றாகும். மேலைத்­தேய மருத்­து­வத்தில் சுகப்­ப­டுத்த முடி­யாது என கைவி­டப்­பட்ட சில நோய்­க­ளையும் யூனானி மருத்­துவத்தில் குணப்­ப­டுத்­தலாம் என்­கிறார் டாக்டர் ஏ.எல்.எஸ்.ரஸானா.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

யூனானி மருத்துவம் பற்றிய சிறிய அறிமுகத்தை தாருங்கள்

யூனானி மருத்­துவ முறை என்­பது அடிப்­படை மருத்­துவ அல்­லது கீழைத்தேயமருத்­துவ (Traditional  Medicine or Eastern  Medicine)    வகை­களில் ஒன்­றாகும். அதா­வது மனி­த­னது நோய்­க­ளையும் அதற்­கான அடிப்­படை கார­ணங்­க­ளையும் கண்­ட­றிந்து அந்த கார­ணங்­களை நிவர்த்தி செய்­வதன்  மூலம் நோய்­களைக் குணப்­ப­டுத்­து­வதே இந்த மருத்­துவ துறையின் சிறப்­பம்­ச­மாகும்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

யூனானி மருத்­து­வத்தில் எவ்­வாறு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கின்­றது?


இந்த மருத்­துவ முறையில் மனித உடல்­களில் இயற்­கை­யா­கவே அமைந்­துள்ள இரத்தம், சளி, பித்தம், கரும்­பித்தம் என்­ப­வற்­றுக்கும் மனி­தர்­களை சூழ­வுள்ள நிலம், நீர், தீ, காற்று என்­ப­வற்­றுக்கும் இடையில் சமச்சீர் அற்ற நிலைமை ஏற்­படும் போது அதன் குண குறி­களின் வெளித்­தோற்­றமே நோய்­களாக தென்­ப­டு­கின்­றன. எனவே இவற்றினை சமப்­ப­டுத்தி சீர்­செய்து வாழ வைக்­கவே யூனானி மருத்­துவம் முயற்­சிக்­கின்­றது . மேலும் இத்­துடன் பரம்­பரை­யியல் (heveditory) பெரும்­பாலும் சம்­பந்­தப்­ப­டு­கி­றது. சுத்தம் முக்­கி­ய­மா­ன­தாக கொள்­ளப்­ப­டு­கி­றது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

யூனானி மருத்­துவ முறை­மையில் ஒரு நோயை அடை­யாளம் காணும் முறை எவ்­வாறு அமையும்?

பொது­வாக நோயா­ளி­களைப் பார்த்து, கேள்­வி­களைக் கேட்டு, தொட்டுப் பார்த்து,  தட்டிப் பார்த்து, மேலும் தேவை­யான பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டு (observation, interrogation, palpation, Auscultation, investigation)  நோய்­களை கண்டு பிடித்து அதற்­கான அடிப்­படை மருந்­து­களை வழங்­கு­கின்றோம். மேற் சொன்ன முறை­களில் நோயா­ளி­களை பரீட்­சிக்கும் போது மனித உடலின் உட்புற நோய்க் கார­ணி­களை கண்­டு­பிடித்து இயற்­கை­யான வெளிக்­கா­ர­ணங்­க­ளையும் கருத்தில் கொண்டு மருத்­துவம் செய்­யப்­ப­டு­கின்­றது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

யூனானி மருத்துவம் பெற்றுக் கொள்­வ­தற்கு வய­தெல்லை ஏதும் உண்டா?

இயற்­கை­யான மூல­கங்­க­ளையும் மூலி­கை­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டே மருந்­துகள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.  இவை வில்­லை­க­ளா­கவும், தூள்­க­ளா­கவும், லேகியம், பாணி முறை­யிலும் கொடுக்­கப்­படும். இவை மனித உடல் தன்­மை­க­ளையும் வயது வேறு­பாடு­க­ளையும் கொண்டு வேறு­ப­டலாம். வய­துக்­கேற்­ற­வாறு அள­வு­களும் வித்தியா­சப்­ப­டலாம்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

யூனானி மருத்­து­வத்தில் உணவு கட்­டுப்­பாட்டை கடை­பி­டிக்க வேண்­டுமா அது பற்­றிய விளக்­கத்­தையும் தாருங்கள்?


இதில் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் உடல் தன்­மைக்கு ஏற்­ற­வாறு உணவு கட்­டுப்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும். இல்­லையேல் ஒவ்­வா­மையும், மேலும் நோய்­களும் ஏற்­ப­டலாம். பொது­வாக சம­நிலை உணவு (balancing diet)  மேற்­கொள்­ளப்­படின்  சமா­ளித்து வாழலாம். அள­வுக்கு மீறிய உடல் பரு­மனை குறைக்க  மூலிகை  மருத்­துவம் உள்­ளதுLike US: https://www.facebook.com/kalpitiyavoice.

ஏனைய மருத்­துவ முறை­களால் தீர்வு காண­மு­டி­யாத ஏதேனும் நோய்­க­ளுக்கும் யூனானி மருத்­து­வத்தில் தீர்வு உண்டா?


மேலைத்­தேய மருத்­து­வத்தில் கைவி­டப்­பட்ட, சுகப்­ப­டுத்த முடி­யாது  என
கைவி­டப்­பட்ட சில நோய்­களும் இம்­ம­ருத்­துவ முறையில் குண­மாக்­கப்­படும்.
உதா­ர­ண­மாக பாரி­ச­வாதம், முடக்­கு­வாதம், தொய்வு நோய், நரம்­புத்­த­ளர்ச்சி
முத­லா­னவை. Like US: https://www.facebook.com/kalpitiyavoice

யூனானி மருத்­துவ முறையில் தோல் ­நோய்க்­கான சிகிச்­சைகள் ஏதா­வது உண்டா ?  அது தொடர்­பா­கவும் சிறு விளக்கம் தாருங்கள்?

யூனானி மருத்­து­வத்தில் தோல் ­நோய்­க­ளுக்கு விசே­ட­மான மருந்­துகள் உள்­ளன.   முகப் பருக்கள், வடுக்கள், சொறி, சிரங்கு, நாட்­பட்ட czema chronic rashes  என்ற நோய், நிற­மாற்­றங்கள், ஒவ்­வாமை, நகச்­சுற்று, சேற்­றுப்­புண்­கடி, அடி தகர்வை, "Psoriasis"   எனும் குஷ்ட நோய் முத­லான பல நோய்­களை குணப்­ப­டுத்தும் மருந்­துகள் இம்­ம­ருத்­துவ முறையில் உள்­ளன.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

இன்­றைய காலப்­பகுதியில் பெண்கள் அதி­க­மாக தமது சருமம் தொடர்பில் கவனம் செலுத்­து­கின்­றனர் அவர்­க­ளுக்கு சில ஆலோ­சனை கூறுங்கள்.

பெண்கள் ஆண்­களை விட சருமத்தில் அக்­கறை செலுத்­து­வது வழக்கம். எனினும் பெண்கள் தமது உணவு முறைகள், சரும நலம், உடல்  பயிற்சி பற்றி பேணாமல் நாளுக்கு நாள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்கும் அலங்­கார பசை­க­ளையும், லோசன்­க­ளையும், சோப்­க­ளையும் பாவிப்­ப­தா­னது கவலை தரு­கின்­றது.  நீரா­காரம், பழங்கள், கீரை, பால் இவற்றை ஒழுங்­கா­கவும் அதி­க­மா­கவும் உட்­கொண்­டாலே சருமம் அழ­கா­கவும் மென்­மை­யா­கவும் அமையும். விட்­டமின் E, Omega, மாதுளம்பழம், உட்­கொள்­ளாமல் சரு­மத்தில் தட­வு­கின்­றார்கள். இவற்றை நாம் உள்ளே எடுத்தால் தான் அவை இரத்த சுற்­றோட்­டத்தை  அடைந்து தோல் கலங்­களையும், மயிர் கலங்­களையும்   சென்­ற­டையும் என்­பதை பெண்­க­ளுக்கு கூறி­வைக்க விரும்­பு­கின்றேன். தோல் நோய்­க­ளுக்கு தெரிவு செய்து தயா­ரிக்­கப்­பட்ட மூலி­கை­க­ளான மருந்து பசை­களை பாவிப்­பதால் பக்க விளை­வு­க­ளையும் தவிர்க்­கலாம்.  Like US: https://www.facebook.com/kalpitiyavoice

தொடர்புகளுக்கு:-
Dr. A.L.S. Razana
I.S.D - Coroner & J.P
(Tel- 0716066848)


---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
--------------------------------------------------------------- 

Post a Comment

0 Comments