Subscribe Us

மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டிய டொல்பினின் உணர்வுபூர்மான காதல்.

ஏ.எம்.ஆர்.

சாதி, மதம், மொழி, வயது என பல தடைகளைக் கடந்த காதல் காவியங்களை அவ்வப்போது பல சம்பவங்கள் இன்றளவிலும் எம்மிடையே நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறன. Like US: https://www.facebook.com/kalpitiyavoice

ஒரு வகையில் தடை கடந்து செல்லும் மனிதர்களின் காதல் சாதாரணமானதுவே. ஆனால் மனிதனைப் போலவே காதல் உணர்வுகொண்ட ஏனைய விலங்குகள் மனிதனுடன் காதல் கொள்வதை கதைகளிலேயே கேட்டிருக்கும் அசாதாரணமான காதல்.

இந்த அசாதாரண காதல் சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. நீர் வாழ் உயிரினமான ஆண் டொல்பின் ஒன்று தனக்கு பேசக் கற்றுக்கொடுத்த இளம் ஆசிரியை காதல் கொண்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டிய டொல்பினின் உணர்வுபூர்மான காதல். ஆம்! நம்பத்தான் வேண்டும்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

ரோபோவுக்கும் மனிதனுக்குமிடையிலான காதலையும் குரங்குக்கும் மனிதனுக்குமிடையிலான காதலையும் சுவாரஸ்யமான திரைக்கதையில் திரைப்படங்களில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் இந்த டொல்பினின் காதல் திரைக்கதையல்ல. உணர்பூர்வமான நிஜக் கதை.

கிளி, நாய் போன்ற உயிரினங்கள் பேசுவதும் அவற்றுக்கு பேசக் கற்றுக்கொடுப்பதும் வழக்கமானதொரு விடயம். எனினும் டொல்பின்கள் பேசுவதோ அவற்றுக்கு பேசக் கற்றுக்கொடுப்பதுவோ வழக்கமானதொன்றல்ல.

ஆனால் டொல்பினுக்கு பேசக்கற்றுக்கொடுத்த போது எவரும் எதிர்பார்க்க முடியாத பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது இப்போதல்ல 1965ஆம் ஆண்டு அமெரிக்காவின் வேர்ஜின் தீவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.  

உளவியலாளர், தத்துவியலாளர், இயல்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் என பன்முகம் கொண்ட வைத்தியர் ஜோன் சி. லில்லி என்பவர் டொல்பினுக் பேசவும் கற்றுக்கொடுக்க முயற்சிகளை முன்னெடுத்தார். நாஸாவின் ஆய்வின் ஒரு பகுதியே இந்த முயற்சி.

10 வாரங்களில் பீற்றர் எனும் டொல்பினுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அப்போது 23 வயதான மார்கரெட் ஹோவ் என்ற யுவதியை உதவியாள நியமித்துள்ளார். இரவு, பகலாக பீட்டருடன் வாழ்ந்துள்ளார் ஹோவ். அத்துடன் முற்றிலும் தனிமையில் பீற்றருடன் ஒன்றாக உண்டு, உறங்கி, குளித்து, விளையாடி பழகியுள்ளார்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice


இதனையடுத்து யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஒரு படி முன்னேறி அதிர்ச்சிளித்தான் மாணவன் பீற்றர் டொல்பின். ஆனால் மாணவ டொல்பினின் மொழிக் கற்கையில் அந்த முன்னேற்றம் நிகழவில்லை. மாறாக கற்பித்த ஆசிரியருடனான காதலில் முன்னேறியுள்ளது.

டொல்பினின் இந்த காதல் சம்பவம் நடைபெற்று சுமார் 5 தசாப்தங்கள் மௌனமாக இருந்த மார்கரெட் பி.பி.சி.யின் ஆவண நிகழ்ச்சி ஒன்றிற்காக அண்மையில் மனம் திறந்து வாய் விட்டுப் பேசியுள்ளார் ஹோவ்.

டொல்பினின் காதல் குறித்த சுவாரஸ்யமான எதிர்பாராத சம்பவங்கள் பலவற்றையும் இதன்போது வெளியிட்டுள்ளார். 22 அங்குலம் ஆழமான நீரினுள் பீற்றருடன் பழக மார்கரெட் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு நேரங்களில் பீற்றர் நீரை அடித்து சிதறவைக்கும் இதனால் மிதக்கும் படுக்கையில் ஏறிக்கொள்வார் மார்கரெட். மெல்லிய உணவுகளை உண்பார் அது நீரினுள் வாழ இலகுவாக இருக்கும். அத்துடன் பீற்றருடனான பரஸ்பர உறவுக்காக தலைமுடியையும் சிறிதாக வெட்டியுள்ளார்.

இவர்களது தினசரி நடவடிக்கையை குறுக்கிட எவரும் இருக்கவில்லை. நீச்சல் உடையுடன் வாழ்ந்த மார்கரெட்டுக்கு சனிக்கிழமை மாத்திரமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் மொழியை டொல்பின்கள் புரிந்துகொள்ளக்கூடியதுடன் மனிதர்கள் போன்று டொல்பினால் ஒலி எழுப்பவும் முடியும் என நம்பி அந்த திறமையினை வளர்க்க விரும்பினார் வைத்தியர் லில்லி. Like US: https://www.facebook.com/kalpitiyavoice

காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் ஆங்கில வகுப்பில் கற்றுக்கொடுப்பதை டொல்பின் பேச வேண்டும் என்பதனை இலக்காகக்கொண்டு செயற்பட்டார் ஹோவ். இதனால் உதட்டின் அசைவுகளை இலகுவாக வெளிப்படுத்த முகத்திற்கு வெள்ளை நிறமும் உதட்டுக்கு கறுப்பு நிறமும் புசி உதட்டு அசைவை தெளிவுபடுத்தியுள்ளார்.

'ஹலோ மார்கரெட்' என எவ்வாறு விழிப்பது என்பதிலிருந்து டொல்பினை பேச வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மார்கரெட்டின் முயற்சியினால் வன், வீ, ட்ரிங்ல், ஹலோ போன்ற வார்த்தைகளை ஓரளவாக உச்சரிக்க ஆரம்பித்துள்ளது. இறுதியில் வேர்க், வேர்க் என மார்கரெட் கூறும்போது டொல்பின் பிளே, பிளே என பதிலளிக்க ஆரம்பித்தது. ஆனால் 'எம்' என்ற எழுத்தை உச்சரிக்க பீற்றர், கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டதாக பி.பி.சியிடம் மார்கரெட் தெரிவித்துள்ளார்.


பீற்றரால் மனித நடவடிக்கையை பின்பற்றக் கூடியதாக இருந்தது.

தடாகத்தினுள்ளும் வெளியிலும் விளையாடப் பழகியது. தான் வேறு வேலையில் இருக்கும் போது பீற்றர் தொலைக்காட்சி பார்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டது என தனது குறிப்பில் மார்கரெட் எழுதியுள்ளார்.

'இவ்வாறு தொடர்ந்தும் நெருக்கமான பாடங்களுடன் பீற்றருடன் பழகினேன். இரவில் எனக்கு அருகிலேயே உறங்கும். சில இரவுவுகளில் நீரை அடிக்காது அமைதியாக இருக்கும். பீற்றருக்கு எப்போதும் பசியாக இருக்கும். இதனால் வழக்கமாக அதி காலையிலேயே என்னை எழுப்பி உணவு அளிக்கச் சொல்லும்' எனத் கூறியுள்ளார் ஹோவ்.

ஒரு கட்டத்தில் குறும்புத் தனமாக மாறிய 6 வயதான பீற்றர் உரையாடலுக்கான உணர்வை இழந்தது போல இருந்துள்ளது. அத்துடன் மார்கரெட் பேசுவதை கேட்பதனை விட சத்தமிட்டு பேசவே விரும்பியுள்ளது பீற்றர். இதனால் மார்கெரட் வாய் திறக்கும் போதே 'போல்' (பந்து) என்று சத்தமாக உச்சரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஆர்ப்பணிப்பான மார்கரெட்டின் பணியை தொடரமுடியாது போயுள்ளது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

2ஆவது வாரத்திலேயே மார்கரெட்டுடன் சுமூகமாக நெருங்கிவிட்டது. பின்னர் மார்கரெட் தொலைபேசியில் வேறு ஒருவருடன் உரையாடுவதையும் விரும்பாத பீற்றர் இடையூறு செய்துள்ளது. அத்துடன் பாலியல் ரீதியிலான தனது உணர்வுகளை மார்கரெட்டிடம் காண்பிடித்துள்ளது.

தனது பாசத்தை காட்டும் விதமான தொடுகைகளையும் பீற்றர் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தனது காதலை வெளிப்படுத்தி தன் பக்கமாக மார்கரெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளான் பீற்றர். அதேவேளை பீற்றருடன் நெருங்கிப் பழகிய மார்கரெட்டால் பீற்றரை தொடர்ந்தும் டொல்பின் என அழைக்க முடியவில்லை என்பதை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'பீற்றர் என்னுடன் இருக்க விரும்பினான். எனது உடற் பாகங்களை தொடும் போது அதனை நான் அனுமதித்தேன். பீற்றருடன் பழகுவது கடினமாக இருக்கவில்லை' எனக் கூறியுள்ளார் மார்கரெட்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

இவ்வாறான நிலைமையில் பணப் பற்றாக்குறையினால் ஆய்வு முடிவுக்கு வர மார்கரெட்டை விட்டு பிரிந்து மியாமியில் இருந்த லில்லியின் மற்றுமொரு டொல்பின் தடாகத்துக்கு சென்றுள்ளான் பீற்றர்.

நீரினுள் அழுத டொல்பினின் கண்ணீர் வெளியே தெரியவில்லை போலும் மியாமி சென்று 2 வாரங்களில் யாரும் எதிர்பாராத வகையில் காதலில் தவித்த பீற்றர் மூச்சுவிட மறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சியான விடயம் மார்கரெட்டுக்கும் தெரியவந்துள்ளது.

காதலினால் இதயம் உடைந்தே பீற்றர் மரணமடைந்துள்ளான் என்பதை விலங்கியல் வைத்தியர் அண்டி வில்லியம்ஸ் விளக்கியுள்ளார். மார்கரெட்டால் பீற்றரின் காதல் குறித்து பிரித்தறிய முடிந்தது. ஆனால் பீற்றரால் முடிவில்லை. பீற்றர் ஆங்கிலத்தை கற்காவிட்டாலும் மனிதனைக் கற்றுக்கொண்டு அவர்களை மனங்களையும் வென்றுவிட்டதே என்று சொல்லாம்.

பீற்றருடனான ஆய்வின் பின்னர் ஆய்வுகூடத்திலிருந்து விலகிய மார்கரெட் ஆய்வின் புகைப்படப்பிடிபாளர் ஜோன் லொவட்டை திருமணம் செய்துகொண்டுள்ளார். 2001ஆம் ஆண்டில் உயிரிழந்த டொக்டர் லில்லி தொடர்ந்தும் 1980கள் வரையில் மனிதனுக்கும் டொல்பினுக்கும் இடையிலான தொடர்பாடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். Like US: https://www.facebook.com/kalpitiyavoice

பீற்றரின் உணர்வுபூர்வமான காதலின் வலியின் பின்னர் வேர்ஜின் தீவிலுள்ள ஆய்வகத்தில் வேறு எவரும் டொல்பினுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.



---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------

Post a Comment

0 Comments