Subscribe Us

இனக்கலவரம் சிறிய விடயம்! பொலிஸ் மாஅதிபர் பதவி விலகத் தேவையில்லை!– மேர்வின் சில்வா

அளுத்கம இனக்கலவரம் ஒரு சிறிய விடயம் என்று வலியுறுத்தும் அமைச்சர்
மேர்வின் சில்வா, அது தொடர்பில் பொலிஸ் மா அதிபரை பதவி விலகச் சொல்வது முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளார். Like US: https://www.facebook.com/kalpitiyavoice
அளுத்கமவில் நடைபெற்ற இன வன்முறைகளின் போது பொலிசார் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று ஐ.தே. க நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையேல் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா,
இது முட்டாள்தனமான கருத்து என்று விமர்சித்துள்ளார். உலகில் பல நாடுகளில் பாரிய இனக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதற்குப் பொறுப்பேற்று அந்நாடுகளின் பொலிஸ் மா அதிபர்களை யாரும் பதவி விலகச் சொல்லி வற்புறுத்தவில்லை.
அந்த சம்பவங்களுடன் ஒப்பிடும் போது அளுத்கமவில் நடைபெற்றது ஒரு சிறு சம்பவம் மட்டுமே. இதற்காக பொலிஸ் மா அதிபரை குற்றம் சாட்டுவது தவறு. அவர் நேர்மையானவர் மட்டுமன்றி திறமையானவரும் கூட. அவரைக் குற்றம் சாட்டுகின்றவர்கள் ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இன வன்முறைகளையும் மறந்துவிடக் கூடாது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice
அவற்றுக்குப் பொறுப்பேற்று எந்தவொரு பொலிஸ் மா அதிபரும் பதவியைத் துறந்த முன்னுதாரணங்கள் இல்லை என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
 
---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------  

Post a Comment

0 Comments