ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று நடைபெறவிருந்த ஹாலிஎல பகுதி ஹோட்டலொன்றை சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
நால்வரடங்கிய
குழுவொன்று நேற்றிரவு குறி்த்த ஹோட்டலின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன
தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்காக பறக்கவிடப்பட்டிருந்த கொடிகளையும் சந்தேகநபர்கள் அறுத்தெறிந்துள்ளனர்.
எவ்வாறாயினும்
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது
செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


0 Comments