இலங்கையிலுள்ள முன்னணி ஆடை விற்பனை நிலையமான நோலிமிட் நிறுவனத்தின் பாணந்துறை கிளை மீது இன்று அதிகாலை தீ வைக்கப்பட்ட போது நிறுவனத்தின் தலைவரான என்.எல்.முபாரக் மார்க்கப் பிரசாரா பணியில் ஈடுபட்டிருந்தார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
குறித்த வர்த்த நிலையத்தின் மீது இன்று அதிகாலை 2.30 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து நிறுவனத்தின் முழுக் கட்டிடமும் தீப்பற்றி எரிந்துள்ளது என நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
"எனினும் நோலிமிட் நிறுவனத்தின் எந்தவொரு கிளையும் காப்புறுதி செய்யப்படவில்லை. இறைவன் எம்மை பாதுகாப்பான்" என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த சம்பவம் இடம்பெற்ற போது நிறுவனத்தின் களஞ்சிய அறையில் நான்கு ஊழியர் நித்திரையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் அவர்களுக்க எவ்வித சேதமுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி: விடியல்.

0 Comments