இந்திய பிரதமராக நரேந்திர மோடி
பதவியேற்றுள்ளது இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மையை ஏற்படுத்தும் என
மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்
கப்ரால் சர்வதேச வர்த்தக சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை
குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அரசியல் மாற்றமானது, புதிய தொழில்
வாய்ப்புக்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்தும் எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் அந்நிய செலாவணி அதிகரிக்கும் எனவும்
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

0 Comments