Subscribe Us

header ads

இலங்கையில் ஜிஹாதில்லை: பாதுகாப்பு அமைச்சு

இலங்கையில் தற்போது ஜிஹாத் உள்ளதாக கூறப்படுவது குறித்து எந்தத் தகவலுமில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.நாட்டில் தற்போது ஜிஹாதின் செயற்பாடுகள் உள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உருமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம் ஆகியவற்றின் பேச்சாளரான ருவாண் வனிகசூரியவை தொடர்புகொண்டு வினவிய போது, 'இது குறித்து எந்த ஆதாரமும் இராணுவத்திற்கு கிடைவில்லை' என்றார்.
 Source: Vidiyal.lk

Post a Comment

0 Comments