Subscribe Us

இலங்கை முஸ்லிம்களினால் அதிர்ந்த ஜெனீவா (வீடியோ படங்கள் இணைப்பு)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு  முன், நேற்று சனிக்கிழமை ஐரோப்பிய இஸ்லாமிய தகவல்  நிலைய ஏற்பாட்டில்   இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்ட முடிவில் ஜெனீவா நகர பொலிஸாரின் ஏற்பாட்டில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் அல்ஹாஜ் ஹனீப் தலைமையில் 76 பக்க அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் உறுதிபடுத்தல் கடிதமொன்றையும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவரிடம் கையளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் ஆதரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இவற்றை உடனடியாக தடுத்துநிறுத்த ஐக்கிய நாடுகள் சபை அவசரமாக தலையிட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments