Subscribe Us

பக்தாத்தை கைப்பற்றுவோம் - ஐசிஸ் போராளிகள் அறிவிப்பு, ஆக்கிரமிப்பு அமெரிக்காவும் களத்தில்

சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான மோத லில் ஈராக் படைக்கு உதவுவதற்கான முதல் கட்ட அமெரிக்க துருப்புகள் அங்கு சென்று பணி களை ஆரம்பித்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

பாதுகாப்பு ஆலோசனை அல்லது முன்ன ணியில் நின்று யுத்தத்தில் ஈடுபடுவதற்காக 300 விசேட அதிரடிப்படையினரை பக்தாத்திற்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உறுதி அளித்திருந்தார். இதில் பாதி அளவா னோர் தற்போது ஈராக்கை சென்றடைந்துள்ளனர். ஏஞ்சிய வீரர்கள் ஒருசில தினங்களில் அங்கு சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கின் பெருமளவான நிலப்பகுதியை கைப் பற்றியிருக்கும் ஐசிஸ் என்று அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களை வெளியேற்ற பிராந்தியத்தில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி வலியுறுத்தியிருந்தார். ஈராக் சென்றிருக்கும் அமெரிக்க துருப்புகளில் மொத்தம் 40 வீரர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈராக் துருப்புகளை ஒழுங்குபடுத்தும் பணியை செவ்வாய்க்கிழமை தொடக்கம் மேற்கொண்டு வருவதாக பென்டகன் குறிப்பட்டது. மேலும் 90 பேர் பக்தாதில் இருந்து கூட்டு இராணுவ நடவடிக்கைகான மையமொன்றை அமைக்கவுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. Like US: https://www.facebook.com/kalpitiyavoice

இந்த குழுக்களுடன் மேலதிகமாக 50 துருப்புகள் அடங்கிய நான்கு குழுக்கள்
இணைந்துகொள்ளவிருப்பதாகவும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஈராக் சென்றிருக்கும் அமெரிக்க துருப்புகள் யுத்த நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்காது என்றும் ஈராக்கியருக்கு ஆலோ சனை மற்றும் உளவு தகவல்களை வழங்குவ தாகவும் ஒபாமா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவுக்கு வான் தாக்குதல் நடத்த ஈராக் அரசு கோரிக்கை விடுத்தபோதும் அங்கு நிலவும் மதப்பிரிவினையில் சார்புநிலை எடுக்கும் அபாயம் இருப்பதால் இதற்கு அமெரிக்கா தயக்கம் காட்டியது.

ஐசிஸ் தலைமையில் போராடும் சுன்னி கிளர்ச்சியாளர்கள் ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மொசூல் உட்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கணிசமான நிலத்தை கைப்பற்றியுள்ளனர். Like US: https://www.facebook.com/kalpitiyavoice

இந்த வன்முறைகளுக்கு மத்தியில் ஐ.நா. மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் ஈராக்கில் ஜ{ன் மாதத்தில் மாத்திரம் குறைந்தது 1,075 பேர் கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்களாவர். பக்தாதில் இருந்து வடக்காக பெய்ஜp நகரில் இருக்கும் ஈராக்கின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தமது முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்ட போதும் துருப்புகள் ஆயுததாரிகளை வெளியேற்ற போராடி வருவதாக ஈராக் அரசு கூறியுள்ளது.

சலாஹ{த்தீன் மாகாணத்தில் இருக்கும் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்காக கடந்த 10 தினங்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த எண்ணெய் நிலையத்தின் மூலம் மூன்றில் ஒரு எரிபொருள் தேவை பு+ர்த்தி செய்யப்படுவதோடு இந்த மோதல் காரணமாக ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெய்ஜp நகருக்கு அருகில் ஈராக் பாதுகாப்பு படை நடத்திய வான் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. மேற்கு ஈராக்கில் ஹ{ஸை பாவிலும் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Like US: https://www.facebook.com/kalpitiyavoice

எனினும் பக்தாதிலிருந்து வடக்காக இருக்கும் அல் பக்ர் விமானத் தளம் மீது கிளர்ச்சியாளர்கள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தியதாக அதிகாரி ஒருவர் ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார். தவிர அன்பார் மாகாணத்தில் இருக்கும் சிரியா மற்றும் ஈராக்கை இணைக்கும் பிரதான எல்லை வாயிலை கைப்பற்றவும் கிளர்ச்சியாளர்கள் போராடி வரு கின்றனர். சிரியா மற்றும் ஈராக்கை இணைத்த இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்கும் இலக்கு டனேயே ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் போராடு கின்றனர்.

இதனிடையே ஈராக்கில் தேசிய மீட்பு அர சொன்றை அமைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக் கையை ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி நிரா கரித்துள்ளார். "இவ்வாறான அழைப்பு ஜனநாயக முறை மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான சதிச் செயல்" என்று அவர் எச்சரித்துள்ளார். ஈராக்கில் அனைத்து மத மற்றும் இன குழுக்களையும் ஒன்றிணைத்த நிர்வாகம் ஒன்றை அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக மலிக்கியை அமெரிக்கா கோரியிருந்தமை குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில் தலைநகர் பக்தாதை ஒரு மாதத்திற்குள் கைப்பற்றுவதாக கிளர்ச்சி யாளர் சார்பில் பேசவல்ல ஒருவர் குறிப்பிட் டுள்ளார். எனினும் பக்தாதை அணுகும் சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு முகம்கொடுக்க அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈராக் பிரதமர் மலிக்கி நேற்று ஆற்றிய உரையில், "எம்மை மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான புனித யுத்தத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்" என்று நாட்டு மக்களை வலியுறுத்தினார்.
 ---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------

Post a Comment

0 Comments