Subscribe Us

header ads

பல்கலைக்கழகங்களின் முன்னோடிகள் இஸ்லாமிய பெண்களே!

Fathima Haza.

இன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் கொடுக்கப்படுன்றதே அதற்கு பெருமை இரண்டு பெண்களை சாரும்.

பாத்திமா அல்ஃப்ஹ்ரி ரஹிமஹுமுல்லாஹ்,அவருடைய சகோதர் மர்யம் ரஹிமஹுமுல்லாஹ்ஆகிய இரண்டு பெண்கள் மொரொக்கோவில் கி.பி,859 ஆம் ஆண்டு ஒரு கல்வி நிலையத்தை நிறுவினர்.அது படிப்படியாக பல்கலைக்கழகமாக உயர்ந்தது,இன்றும் அல்ஃகராவின் (AlQaraounine University) பல்கலைக்கழகமாக அது விளங்குகிறது.உலக புகழ்பெற்ற ஒக்ஸ் ஃபோர்ட் பல்கலைக்கழகம் கூட 1096இல் தான் துவக்கபட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அல்ஃகராவின் பல்கலைக்கழகத்தில் குர் ஆன்,ஹதீஸ்,பிக்ஹ் ஆகியவற்றுடன் கணிதம்,வானியல் (Astronomyபுவியல்,மருத்துவம் என அனைத்து துறைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

பிரபல அறிஞர்களும் இப்னு கல்தூன்,இப்னு மைமூன் போன்றோர் கற்றதும் இங்கேதான்.ஐரோப்பியாவின் வரைபடத்தை வரைந்த முஹம்மத் அல் இத்ரீஸ் கற்றதும் இங்கு தான்,ஏன்,அன்றைய கிறிஸ்தவ அறிஞர்கள் பலர் ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்து கல்வி கற்றனர் என்பதும் வரலாற்று உண்மை ..

எல்லாம் சரிதான்..இன்று இஸ்லாமிய பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதே என்று எண்ணலாம்!உண்மை தான்!எப்போது இஸ்லாமியச் சமூகம் வணக்கத்தையும் வாழ்வையும் பிரித்தார்களோ,என்று கல்வியை மார்க்கக் கல்வி-உலகக் கல்வி என்று பிரித்தார்களோ(இதில் ஐரோப்பியர்களுக்குப் பெரும் பங்குண்டு)அன்று முதல் இன்றுவரை இஸ்லாமிய சமூகம் கல்வியில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது,,

இருப்பினும்,இன்று மேற்குலகில் பெண் கல்வியியலாளர்களும் இஸ்லாமியப் பெண் இயக்கவாதிகளும் பலர் உள்ளனர் என்பது ஆறுதலான ஒன்றாகும்

முன்னோடிகள் இஸ்லாமியப் பெண்களே!உலகின் முதன் முதலில் பல்கலைக்கழங்களை நிறுவி அதன் மூலம் சான்றிதழ்களுடன் கூடிய பட்டப்படிப்பைத் தொடங்கிய,,
 இருப்பினும், இன்று மேற்குலகில் பெண் கல்வியியலாளர்களும் இஸ்லாமிய பெண் இயக்கவாதிகளும் பலர் உள்ளனர் என்பது ஆறுதலான ஒன்றாகும்.

Post a Comment

0 Comments