Subscribe Us

இராஜினாமா செய்தார் இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், இன்று(17) குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்களது இராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்  கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று(17) நடைபெற்றது.

இதன் போது பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு பின் பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, ராஜினாமா கடிதத்தை, மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கையளித்துள்ளார்.

Post a Comment

0 Comments