Subscribe Us

header ads

கஹ்பாவில் கால்வைத்து நிற்கும் பொலிஸார்..!

புனித கஹ்பாவின் மீது அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொலிஸார் ஒருவர் காலை வைத்திருக்கும் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது பல ரது கோபத்திற்கும் உள்ளாகி யுள்ளது.

இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி மக்கா ஆளுநரான இளவரசர் மி'hல் பின் அப்துல்லாஹ் மக்கா பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி மேஜர் nஜனரல் அப்துல் அஸீஸ் அல் சவ்லிக்கு உத்தர விட்டுள்ளார். குறித்த பொலிஸார் ஹஜருல் அஸ்வத் கறுப்பு கல்லுக்கு மேலால் தனது காலை வைத்திருக்கும் புகைப்படம் சமூக இணையதளங்களில் பரவியுள்ளது.

இந்நிலையில் இரு புனித பள்ளி வாசல்களிலும் பணியாற்றும் பாது காப்பு, இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அங்கிருக்கும் புனிதஸ்தலங்களை மதிக்கவும், யாத்திரிகர்களை கௌரவத்துடன் நடத்தவும் பயிற்சி அளிக்கும் அறி வு+ட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு பொலிஸ் பிரதானிக்கு இள வரசர் மி'hல் அறிவுரை வழங்கி யுள்ளார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டிருக் கும் சவு+தி வலைப்பு+ பதிவாளர்கள், இவ்வாறு புனிதஸ்தலங்களை மதிக் காத அதிகாரிகள் புனித பள்ளிவாசல்களின் பணிகளில் அமர்த்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments