கடந்த ஒன்றரை மாத காலமாக நடந்து முடிந்த தேர்தல் இறுதி முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.
ஆரம்பம் முதலே நாடு முழுவதும் 332 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
காங்., 70 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஏனையகட்சிகள் 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
அ.தி.மு.க,. 37 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் இதற்கு அடுத்தப்படியாக மம்தா கட்சியான திரிணாமுல் காங்., 32 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. காங்., துணை தலைவர் ராகுல் கூட பா.ஜ., வேட்பாளரை விட குறைந்த ஓட்டுக்கள் பெற்று முன்னும், பின்னுமாக இருந்து வருகிறார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி ஒன்றரை லட்சத்திற்கும் மேலான ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்..
ஓட்டு எண்ணும் மையங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மத்திய ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கி நடந்து வருகிறது.
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கி நடந்து வருகிறது.



0 Comments