Subscribe Us

header ads

500 நாட்­க­ளாக புவியைச் சுற்றி வரும் அமெ­ரிக்க விமானம்; ஏன் என யாருக்கும் தெரி­ய­வில்லை

உலக வல்­ல­ர­சாக தன்னை நிலை­நி­றுத்­திக்­கொள்ள அபா­ய­க­ர­மான நட­வ­டிக்­கைகள் பல­வற்றை அமெ­ரிக்கா புவியில் மட்­டு­மன்றி ஆகா­யத்தில் முன்­னெ­டுப்­ப­தாக பல்­வேறு வகை­யான ஆதா­ர­மற்ற தகவல் உலா­வ­ரு­கின்­றன.

அத்­த­க­வல்­களில் பல உண்­மை­யா­கவும் சில சம­யங்­களில் அமைந்­து­வி­டு­கின்­றன. நீண்ட கால­மாக மக்­களின் சிந்­த­னை­களை சித­ற­டித்த பறக்கும் தட்டு எனும் விடயம் அமெ­ரிக்­காவின் உளவு பார்க்கும் திட்­டத்தின் ஒரு பகுதி என்­ப­தனை அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவின் தகவல்­களே அண்­மையில் உறு­திப்­ப­டுத்­தின.

ரஷ்­யா­வு­ட­னான பனிப்போர் காலத் தில் இது­போன்ற பல திருட்டு வேலை­களை நிதா­ன­மா­கவே நடத்­தி­யுள்­ளது அமெ­ரிக்கா. ரஷ்­யாவின் வளர்ச்சி பொறுக்­காமல் நில­வினை தகர்க்­கவும் அமெ­ரிக்கா முயற்­சித்­துள்­ள­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன. அதே­போன்று விண்ணில் ஆயு­தங்­களை சேமித்து பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களும் அமெ­ரிக்­காவால் தொடர்ந்தும் நடை­பெற்று வரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் அமெ­ரிக்­கா­வுக்குச் சொந்­த­மான விமா­ன­மொன்று புவியின் சுற்றுப் பாதையில் 500க்கும் அதி­க­மான நாட்­க­ளாக பறந்­து­கொண்­டி­ருப்­ப­தாக கடந்த சில வாரங்­க­ளாக தக­வல்கள் வெளி­யாகி வரு­கின்­றமை அதிர்வலை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

எக்ஸ் 37பி (X37B) எனப்­படும் ஆளில்­லாமல் இயங்கும் ரோபோட்டிக் இயந்­திரத்
தொழில்­நுட்­பத்தில் இயங்கும் விண்­வெளி விமானம் ஒன்றே மர்­ம­மான முறையில் புவியைச் சுற்றி வரு­கின்­றது. இந்த விண்­வெளி விமானம் ஏன் இவ்­வாறு சுற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றது என்­பதே ஆச்­ச­ரி­ய­மா­க­வுள்­ளது.


எக்ஸ் 37பி விமானம் குறித்து அறி­யப்­பட்ட தக­வல்கள்
 
இவ்­விண்­வெளி விமா­ன­மா­னது அமெ­ரிக்க வான் படைக்­காக ஒரு சோதனை விண்­வெளி வாக­ன­மாக கலி­போர்­னி­யாவில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது விண்­வெளி ஆய்­வா­ளர்­க­ளுக்கு கூடுதல் வச­தியை வழங்கும் ஒரு வளர்ச்­சி­ய­டைந்த விமானம் ஆகும்.

29 அடி நீளமும் 9.5 அடி உயரமும் சுமார் 15 நீள­மான இறக்கை அமைப்­பையும் கொண்­டுள்ள இவ்­விண்­வெளி விமானம், சோதனை விண்­க­லத்தின் கால் பகுதி அள­வா­னது. புவியின் சூழ­லுக்­கான மீள் வரு­கைக்­கென பாது­காப்­புக்­காக வெப்பக் கவச பொருட்­க­ளு­டனே இது வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

எக்ஸ் 37பி விண்­வெளி விமானம் தற்­போது மணிக்கு 28,044 கிலோ மீற்றர் வேகத்தில் வானில் புவியின் சுற்­று­வட்டப் பாதையில் 350 கிலோ மீற்றர் உய­ரத்தில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. எக்ஸ் 37பி, கட்­ட­ளைக்கு இயங்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. எனவே தரை­யி­றக்­கவும் முடியும். ஆனால் அது எப்­போது என எவ­ருக்கும் தெரி­ய­வில்­லையாம்.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி ரொக்கெட் மூலம் ஏவப்­பட்ட இவ்­வி­மானம் 2010 டிசம்பர் 3ஆம் திகதி தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது விமா­னத்தின் ஒரு டயரும் விமா­னத்தின் வயிற்றுப் பகு­தி­யிலும் சிறி­ய­ள­வி­லான சேத­மேற்­பட்­டுள்­ளது.

பின்னர் மீண்டும் பிளோ­ரி­டா­வி­லுள்ள கேப் கான­வெ­ர­லி­லி­ருந்து 2012 டிசம்பர் 11ஆம் திகதி மீண்டும் விண்­ணுக்கு ஏவப்­பட்­டுள்­ளது. தற்­போது 500 நாட்­களைக் கடந்தும் புவி சுற்று வட்டப் பாதையை சுற்றி வந்­து­கொண்­டி­ருக்­கி­றது. அதற்குத் தேவை­யான எரி­பொருள் வச­தியும் அதில் உள்­ளதாம்.

எக்ஸ் 37பியின் விண்­வெளி விமானம், ஓர்­பிடெல் டெஸ்ட் வெஹிகிள் (சுற்­றுப்­பாதை சோதனை வாகனம்) எனும் ஓடிவி எனும் 3 மாதி­ரிகள் தயார்­செய்­யப்­பட்­டது. ஓடிவி 1 முதலில் அனுப்­பப்­பட்டு புவியின் சுற்றுப் பாதையில் 225 நாட்­களும் ஓடிவி 2 செலுத்­தப்­பட்டு 469 நாட்­களும் விண்­வெ­ளியில் சோத­னைக்­காக விடப்­பட்­டது. 3ஆவ­தாகச் சென்ற விமா­னவே 500 நாட்கள் கடந்து தரை­யி­றக்­கப்­ப­டாமல் உள்­ளது.

மர்­ம­மான இலக்கு
 
அமெ­ரிக்க விமானப் படைத்­த­ளத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இச்­சோ­த­னைகள், புதிய விண்­வெளி தொழில்­நுட்­பங்­க­ளுக்­கான சோதனை முயற்சி என்­ப­தனைத் தவிர வேறு­த­க­வல்கள் இல்லை.

270 நாட்கள் என திட்­ட­மி­டப்­பட்டு இவ்­வி­மானம் அனுப்­ப­ப்பட்­டது ஆனால் இது நீண்ட பய­ண­மாக தெரி­கி­றது. வேறு தகல்கள் தம்­மிடம் இல்லை. அத்­துடன் வேறு செய்­ம­தி­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இது நீண்ட பய­ண­மல்ல. இது சாதா­ர­ண­மா­னது. குறிப்­பாக தேசிய பாது­காப்பு செய்­மதி­கள் சில ஆண்டு­க­ளி­லி­­ருந்து சில தசாப்­தங்­க­ளுக்கு புவியின் சுற்­று­வட்டப் பாதையை சுற்­றி­வ­ரக்­கூ­டி­ய­தாக வடி­மைக்­கப்­பட்­டுள்­ளது என முன்னாள் ஓர்­பிடெல் ஆராய்ச்சி வல்­லு­நரும் தொழில்­நுட்ப ஆலோ­ச­க­ரு­மான பிரைன் வீடன் கூறி­யுள்ளார்.

எக்ஸ் 37பி விமா­னத்தை அனுப்­பிய அமெ­ரிக்க வான் படையும் இது குறித்த தக­வல்­களை வெளி­யி­டாது இர­க­சி­ய­மா­கவே வைத்­துள்­ளது. இதனால் இவ்­வி­மா­னத்தின் இலக்கும் மர்­ம­மா­கவே உள்­ளது. இதனால் இது ஒரு விண்­வெளி ஆயு­த­மாக இருக்­கலாம் எனவும் சந்­தே­கங்கள் நில­வு­கின்­றன.

மத்­திய கிழக்கு நாடு­களை அவ­தா­னிக்­கி­றது?
 
'அவ­தா­னிக்கும் வகை­யி­லுள்ள எக்ஸ் 37பி விமானம் செய்­ம­தி­களின் பாதை­யை­விட குறைந்த உய­ரத்­தி­லேயே சுற்றி வரு­கின்­றது. எவ்­வா­றெ­னினும் இது அமைந்­துள்ள விதத்தின் படி புவியின் ஒரு பரப்பை அவ­தா­னிக்­கின்­றது. அது ரஷ்­யா­வு­மல்ல, ஐரோப்­பா­வு­மல்ல. எனது கணிப்பின் படி மத்­திய கிழக்கு நாடுகள்' என வீடன்
தெரி­வித்­துள்ளார்.

எக்ஸ் 37பி உரு­வாக்கம்

இதே­வேளை இவ்­வி­மா­னத்தின் உரு­வாக்கம் குறித்தும் தக­வல்கள் போது­மா­ன­தாக இல்லை. 1999ஆம் ஆண்­டியில் போயிங்­கிடம் விண்­வெளி விமா­னத்தை தயா­ரிக்கும் திட்டம் ஒன்றை முன்­வைத்­தது. பின் நாளில் 2004 ஆம் ஆண்டு அத்­திட்டம் DARPA எனப்­படும் அமெ­ரிக்­காவின் பாது­காப்பு மேம்­பட்ட ஆராய்ச்சி நிறு­வ­னத்­திடம் கை மாறி மிகவும் இர­க­சி­ய­மாக பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றதாம்.

இந்­நி­று­வனம் உரு­வாக்­கிய விமா­ன­மா­கவும் இது இருக்­கலாம் எனவும் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் இவ்­வி­மா­னத்தின் படங்கள் வெளி­யா­கி­யி­ருந்த போதிலும் அது குறித்த தக­வல்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. வியட்­நாமில் அமெ­ரிக்­காவில் பயன்­ப­டுத்­தப்­பட்ட லொக்ஹீட் எஸ்.ஆர்71 பிளக்பேர்ட் ேர்ட் விமானம் குறித்த ரகசியங்கள் 10 வருடங்களின் பின்னரே வெளியிடப்பட்டது. எக்ஸ் 37பியும் அவ்வாறு அமைந்துவிடலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

எது எவ்­வா­றெ­னினும் உண்­மை­யி­லேயே விண்­வெளி தொழில்­நுட்ப ஆராய்ச்­சி­யாக இருக்­கலாம், உலக நாடு­களை உளவு பார்க்­கலாம், சோதனை முயற்சி­யாக இருக்­கலாம், என்.எஸ்.ஏவுக்­காக தர­வுகள் திரட்­டப்­ப­டலாம் அல்­லது விண்­வெ­ளியில் ஆயுதக் களஞ்­சி­ய­மாக இருக்­கலாம் என பல்­வேறு சந்­தே­கங்­களை சுமந்து புவியைச் சுற்றி வரும் எக்ஸ் 37பி எப்­போது பூமிக்கு வரும் என்­ப­த­னை­விட எப்­போதும் ஆபத்­தினை கொண்­டு­வ­ராமல் இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது.

Post a Comment

0 Comments