Subscribe Us

header ads

5 டொலர் கட்டணத்தை செலுத்த முடியாததால் 75 வருடங்களின் பின்னர் பட்டம் பெற்ற 99 வயது பெண்

99 வயது பெண்ணொருவர் செலுத்தத் தவறிய 5 டொலர் கட்டணத்தைச் செலுத்தி தனது டிப்ளோமா பட்டத்தை 75 வருடங்களின் பின் பெற்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

மெயின் நகரைச் சேர்ந்த ஜெசி வைட் என்ற மேற்படி பெண் 1939 ஆம் ஆண்டில் தனது டிப்ளோமா பட்டத்தை பெறவிருந்தார். எனினும் அவரால் அதற்குரிய 5 டொலர் கட்டணத்தை அச்சமயம் செலுத்த முடியாததால் அவரால் அந்த பட்டத்தை பெற முடியாது போனது. 
 
இந்நிலையில் அவரது நண்பியொருவர் பல தசாப்த காலமாக ஜெசி தனது டிப்ளோமா பட்டத்தை பெறத் தவறியுள்ளதை அறிந்து அவருக்குரிய கட்டணத்தை செலுத்தி அவர் பட்டத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். 

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த பட்டமளிப்பு விழா தொடர்பில்  சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. 
 
தான் பட்டம் பெற்றமை குறித்து ஜெசி விபரிக்கையில் பட்டத்தை பெற்றமை தனக்கு மாபெரும் திருப்தி உணர்வைத் தருவதாக கூறினார். 
 
ஒருபோதும் கற்பதை கைவிடாதீர்கள். கற்பதை கைவிடும் போது நீங்கள் விரைவில் வயோதிபமடைந்து விடுவீர்கள் என்று அவர் தெரிவித்தார். A

Post a Comment

0 Comments