Kalpitiya 1st
நிலத்தோற்றம் - இடவமைப்பு
கற்பிட்டிப் பிரதேசமானது பெரு நிலப்பரப்பிலிருந்து பிரிந்துள்ளமையை பலவீனமாக ஒருசிலரால் கருதப்படுகின்றது. வெளிப்பிரதேசங்களுடன் நேரடித் தொடர்புகளின்மை, போக்குவரத்துக்கான காலஇடைவெளிகள், அனுபவங்கள் கிரப்படாதிருத்தல் போன்ற காரணங்களை முன்னிருத்தி இக்கருத்துக்களுக்கு வலுசேர்க்கின்றனர்.
இத்தகைய இயற்கைத் தன்மையை மாற்றியமைக்க முடியாத நிலையில் அவற்றின் பலவீன்ங்களை கருத்திற்கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்திகளையும் தேவைகளையும் இரண்டாம் நிலைக்கு தள்ளமுடியாது.மாறாக பிரதேசத்தின் ஒருமைப்பாடு, தனித்துவம், வாழ்வியல் பொருளாதாரம் உள்ளிட்ட சகல அம்சங்களிலும் தனித்தன்மையை பேணுவதற்கும் பிறசக்திகளின் தலையீடுகளையும் செல்வாக்குகளையும் தவிர்த்துக் கொள்வதற்கு இத்தகைய புவிசார் அமைப்பை ஆதாரமாக க்கொண்டு செயற்படுவதற்கான வழிவகைகளை ஆராய்வது புத்திசாலித்தனமகும். பெருநிலப்பரப்பிலிருந்து விலகி நீண்ட இடைவெளியில் கல்பிட்டி அமைந்திருப்பதால் அதற்கான இருப்பு, எழுச்சி, தனித்துவம் என்பனவற்றை விட்டுக்கொடுப்பது அவசிமற்றதாகும். கல்பிட்டிப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கும் – அதனைக்கடந்து விசேட தேவைக்கருதியும் சகல அபிவிருத்திகளையும் அடைந்து கொள்வதற்கான தார்மீக உரிமை கல்பிட்டிக்கும் உண்டு.
அவ்வுரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதில் எத்தகைய விட்டுக்கொடுப்புகளும் அவசியமற்றதாகும். கல்வித்துறையில் கேந்திர நிலையமாக கல்பிட்டியையும் தக்கவைப்பதில் – முன்னேற்றுவதில் தேவையான பங்களிப்புகளை வழங்குவதில் கல்விப்புலம் சார்ந்தவர்களினதும் – சமூகப் பணியாளர்களினதும் கடமையாகும். அதற்கான திட்டமிடல்கள் அமுலாக்கல்கள் மீள் நடவடிக்கைகள் என்பன காத்திரமான முறையில் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
உள்நாட்டு இடப்பெயர்வுகள் 1990களில் இப்பிரதேசத்திற்கு வடபுல மக்களின் வருகையோடு கல்வித்துறையிலும் பெரும்மாற்றங்களை உள்வாங்கும் அவசியம் தோன்றியது. ( இன்று வரையிலும் அந்த அவசியம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது) ஒத்த தன்மையுடைய சமய கட்டமைப்பினருடன் வெவ்வேறு சமூக கட்டமைப்பினர் சேர்ந்தியங்கும் நிலைமை உருவானது. இது கல்வியில் புதியதொரு போட்டித் தன்மையை உருவாக்கியது. வடபுல மக்களின் இயல்பான தனித்துவங்களுடன் உள்ளுர் சமூகம் தடுமாற்றத்துடனேயே இன்றுவரை முகங்கொடுத்து வருகின்றது.
தனக்கான தனித்துவ அடையாளங்களை இழந்த சமூகம் மிக இலகுவாக பிரிதொரு சமூக கட்டமைப்பின் தாக்கத்திற்குட்படவே செய்யும். அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான காத்திரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமை தொடர்ச்சியாக கல்பிட்டியின் கல்விப்புல பின்னடைவுகளுக்கு வழியமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கல்பிட்டி பிரதேசத்தின் கல்விவளர்ச்சிக்கு இடம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புகளை பெற்று தன்னைநிலை நிறுத்திக்கொள்வதற்கான வழிவகைகளை கடைப்படிக்காமை துரதிஸ்ட்டமானதாகும். இவர்களிடையே காணப்பட்ட அரசியல், கல்வி, பொருளாதார பின்னணிகள், வளங்களின் கிடைப்பனவு போன்ற பல்வேறு அம்சங்களை பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொண்டிருப்பின் பாடசாலையின் சமகால நிலைமை வேறாக அமைந்திருக்கும். உள்ளுர் தலைமைத்துவங்களிடையே நிலவிய ஆளுமைப்பலவீனங்கள் இச்சந்தர்ப்பங்களை இல்லாது செய்துள்ளன.
சமகாலத்தில் பாடசாலை எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினையான பிரதேசவாத போக்குகள் மாணவ சமுதாயத்தின் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றன. உறுதியான தீர்மானங்களும் – அமுலாக்கங்களையும் மேற்கொள்ள முடியாதிருப்பதுடன் இதயசுத்தியுடனான நோக்கை கட்டியெழுப்புவதில் சவாலாகவும் விளங்குகின்றது. ஆளணியினரின் மனப்பாங்குகள் பாடசாலையினதோ சமூகத்தினதோ நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் ஒருமுகப்படுத்தப்படவில்லை. அதற்கான முயற்சிகள் இன்மையாலும் பொறுப்புக்கூறலில் பரஸ்பரம் சார்பான விமர்சனக் கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன. இக்கருத்துக்கள் அடிப்படைத் தன்மையற்றதுடன் தார்மீகத் தன்மையற்றதுமாகும்.
கல்விப்புலம் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கப்பால் இதனை மேலதிகமான ஆதாரப்பிரச்சினையாக கருதி சமகாலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். எவ்வாறாயினும் பாடசாலை,சமூகநோக்கில் இதுபாரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மனித வளங்களின் பிரயோகம், கிடைக்கும் சேவைகளின் தரம், நெறிப்படுத்தல்கள், ஆற்றல்கள், மற்றும் பிரயோகம் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமூகத்திற்கு பரிமாறப்படுகின்றன. ஆளணியினரின் தேக்க நிலை காரணமாக புதிய வளங்களை பிரதியீடு செய்வதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன.
இதனை இதயசுத்தியுடன் உணர்ந்து செயற்படக்கூடிய கூட்டுத் தலைமைத்துவங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான காத்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன. அதற்கான பணிகளை உள்ளுர்- வடபுல சமூக கட்டமைப்பினர் இணைந்தே மேற்கொள்ள வேண்டும். இதன் நன்மைகள் இருசாராரின் இளம்சந்த தியினரிடையே சமவிகித த்தில் பகிர்ந்து செல்லும்.
ஆளணியினர்.
பாடசாலைக் கட்டமைப்பில் பிரதான இடத்தை கல்விசார்- கல்விசாரா ஆளணியினர் வகிக்கின்றனர். பாடசாலை உயிரோட்டமாகவும் மகிழ்ச்சிகரமான கற்றல் - கற்பித்தல் இடம்பெறவும் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
இப்பாடசாலையை பொறுத்தவரை சுமார் 95 வீதமானோர் இப்பாடசாலையின் பழைய மாணவர்களாகவும் கல்பிட்டிப் பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர். ஆசிரிய நியமனத்தையும் இப்பிரதேசத்திலேயே பெற்றுள்ளனர். தொலைக்கல்வி பாடநெறி மூலமாக ஆசிரியப்பயிற்சியை முடித்தவர்கள் 60 வீதமானோர் இப்பாடசாலையில் கடமையாற்றுகின்றனர்.
இவர்களின் நடத்தைக் கோலங்கள் பின்வருமாறு
நிலத்தோற்றம் - இடவமைப்பு
கற்பிட்டிப் பிரதேசமானது பெரு நிலப்பரப்பிலிருந்து பிரிந்துள்ளமையை பலவீனமாக ஒருசிலரால் கருதப்படுகின்றது. வெளிப்பிரதேசங்களுடன் நேரடித் தொடர்புகளின்மை, போக்குவரத்துக்கான காலஇடைவெளிகள், அனுபவங்கள் கிரப்படாதிருத்தல் போன்ற காரணங்களை முன்னிருத்தி இக்கருத்துக்களுக்கு வலுசேர்க்கின்றனர்.இத்தகைய இயற்கைத் தன்மையை மாற்றியமைக்க முடியாத நிலையில் அவற்றின் பலவீன்ங்களை கருத்திற்கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்திகளையும் தேவைகளையும் இரண்டாம் நிலைக்கு தள்ளமுடியாது.மாறாக பிரதேசத்தின் ஒருமைப்பாடு, தனித்துவம், வாழ்வியல் பொருளாதாரம் உள்ளிட்ட சகல அம்சங்களிலும் தனித்தன்மையை பேணுவதற்கும் பிறசக்திகளின் தலையீடுகளையும் செல்வாக்குகளையும் தவிர்த்துக் கொள்வதற்கு இத்தகைய புவிசார் அமைப்பை ஆதாரமாக க்கொண்டு செயற்படுவதற்கான வழிவகைகளை ஆராய்வது புத்திசாலித்தனமகும். பெருநிலப்பரப்பிலிருந்து விலகி நீண்ட இடைவெளியில் கல்பிட்டி அமைந்திருப்பதால் அதற்கான இருப்பு, எழுச்சி, தனித்துவம் என்பனவற்றை விட்டுக்கொடுப்பது அவசிமற்றதாகும். கல்பிட்டிப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கும் – அதனைக்கடந்து விசேட தேவைக்கருதியும் சகல அபிவிருத்திகளையும் அடைந்து கொள்வதற்கான தார்மீக உரிமை கல்பிட்டிக்கும் உண்டு.
அவ்வுரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதில் எத்தகைய விட்டுக்கொடுப்புகளும் அவசியமற்றதாகும். கல்வித்துறையில் கேந்திர நிலையமாக கல்பிட்டியையும் தக்கவைப்பதில் – முன்னேற்றுவதில் தேவையான பங்களிப்புகளை வழங்குவதில் கல்விப்புலம் சார்ந்தவர்களினதும் – சமூகப் பணியாளர்களினதும் கடமையாகும். அதற்கான திட்டமிடல்கள் அமுலாக்கல்கள் மீள் நடவடிக்கைகள் என்பன காத்திரமான முறையில் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
உள்நாட்டு இடப்பெயர்வுகள் 1990களில் இப்பிரதேசத்திற்கு வடபுல மக்களின் வருகையோடு கல்வித்துறையிலும் பெரும்மாற்றங்களை உள்வாங்கும் அவசியம் தோன்றியது. ( இன்று வரையிலும் அந்த அவசியம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது) ஒத்த தன்மையுடைய சமய கட்டமைப்பினருடன் வெவ்வேறு சமூக கட்டமைப்பினர் சேர்ந்தியங்கும் நிலைமை உருவானது. இது கல்வியில் புதியதொரு போட்டித் தன்மையை உருவாக்கியது. வடபுல மக்களின் இயல்பான தனித்துவங்களுடன் உள்ளுர் சமூகம் தடுமாற்றத்துடனேயே இன்றுவரை முகங்கொடுத்து வருகின்றது.
தனக்கான தனித்துவ அடையாளங்களை இழந்த சமூகம் மிக இலகுவாக பிரிதொரு சமூக கட்டமைப்பின் தாக்கத்திற்குட்படவே செய்யும். அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான காத்திரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமை தொடர்ச்சியாக கல்பிட்டியின் கல்விப்புல பின்னடைவுகளுக்கு வழியமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கல்பிட்டி பிரதேசத்தின் கல்விவளர்ச்சிக்கு இடம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புகளை பெற்று தன்னைநிலை நிறுத்திக்கொள்வதற்கான வழிவகைகளை கடைப்படிக்காமை துரதிஸ்ட்டமானதாகும். இவர்களிடையே காணப்பட்ட அரசியல், கல்வி, பொருளாதார பின்னணிகள், வளங்களின் கிடைப்பனவு போன்ற பல்வேறு அம்சங்களை பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொண்டிருப்பின் பாடசாலையின் சமகால நிலைமை வேறாக அமைந்திருக்கும். உள்ளுர் தலைமைத்துவங்களிடையே நிலவிய ஆளுமைப்பலவீனங்கள் இச்சந்தர்ப்பங்களை இல்லாது செய்துள்ளன.
சமகாலத்தில் பாடசாலை எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினையான பிரதேசவாத போக்குகள் மாணவ சமுதாயத்தின் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றன. உறுதியான தீர்மானங்களும் – அமுலாக்கங்களையும் மேற்கொள்ள முடியாதிருப்பதுடன் இதயசுத்தியுடனான நோக்கை கட்டியெழுப்புவதில் சவாலாகவும் விளங்குகின்றது. ஆளணியினரின் மனப்பாங்குகள் பாடசாலையினதோ சமூகத்தினதோ நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் ஒருமுகப்படுத்தப்படவில்லை. அதற்கான முயற்சிகள் இன்மையாலும் பொறுப்புக்கூறலில் பரஸ்பரம் சார்பான விமர்சனக் கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன. இக்கருத்துக்கள் அடிப்படைத் தன்மையற்றதுடன் தார்மீகத் தன்மையற்றதுமாகும்.
கல்விப்புலம் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கப்பால் இதனை மேலதிகமான ஆதாரப்பிரச்சினையாக கருதி சமகாலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். எவ்வாறாயினும் பாடசாலை,சமூகநோக்கில் இதுபாரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மனித வளங்களின் பிரயோகம், கிடைக்கும் சேவைகளின் தரம், நெறிப்படுத்தல்கள், ஆற்றல்கள், மற்றும் பிரயோகம் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமூகத்திற்கு பரிமாறப்படுகின்றன. ஆளணியினரின் தேக்க நிலை காரணமாக புதிய வளங்களை பிரதியீடு செய்வதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன.
இதனை இதயசுத்தியுடன் உணர்ந்து செயற்படக்கூடிய கூட்டுத் தலைமைத்துவங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான காத்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன. அதற்கான பணிகளை உள்ளுர்- வடபுல சமூக கட்டமைப்பினர் இணைந்தே மேற்கொள்ள வேண்டும். இதன் நன்மைகள் இருசாராரின் இளம்சந்த தியினரிடையே சமவிகித த்தில் பகிர்ந்து செல்லும்.
ஆளணியினர்.
பாடசாலைக் கட்டமைப்பில் பிரதான இடத்தை கல்விசார்- கல்விசாரா ஆளணியினர் வகிக்கின்றனர். பாடசாலை உயிரோட்டமாகவும் மகிழ்ச்சிகரமான கற்றல் - கற்பித்தல் இடம்பெறவும் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
இப்பாடசாலையை பொறுத்தவரை சுமார் 95 வீதமானோர் இப்பாடசாலையின் பழைய மாணவர்களாகவும் கல்பிட்டிப் பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர். ஆசிரிய நியமனத்தையும் இப்பிரதேசத்திலேயே பெற்றுள்ளனர். தொலைக்கல்வி பாடநெறி மூலமாக ஆசிரியப்பயிற்சியை முடித்தவர்கள் 60 வீதமானோர் இப்பாடசாலையில் கடமையாற்றுகின்றனர்.
இவர்களின் நடத்தைக் கோலங்கள் பின்வருமாறு
* சமநிலையிலான ஆளுமைக் கூறுகளை – இதன் இயல்புகளை வெளிப்படுத்தி முன்னுதாரணமாக செயற்படாமை.
*சமூகம் எதிர்பார்க்கும் தகைமையை – தொழிலாற்றலை வெளிப்படுத்தாமை – இற்றைப்டுத்தாமை.
*பொதுநோக்கில் சிந்திக்கவும் கருத்தொருமைப்பாட்டிற்கும் ¸
நிலைபெறாமை தமக்கிடையேயான கருத்துமுரண்பாடுகளினால் எதிலும் ¸ பெரும்பான்மை ஆதரவைப்பெற்று செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளனர்.
* பொறுப்பற்ற அல்லது மாற்று அணுகுமுறைகள முன்வைக்காத விமர்சனங்களை பிரசாரப்படுத்தல். மாணவர் நலனோம்பு வடயங்களிலிருந்து ஒதுங்கிக் ¸ கொள்ளுதல்
* இணைப்பாடச் செயற்பாடுகளில் மாணவர்கள நெறிப்படுத்தாமை.
* குறுகிய இலாப நோக்கத்துடன் செயற்படுதல் மாணவர்களிடையே ஒழுக்க நடைமுறைகளயும் ¸ விழுமியங்களையும் கட்டியெழுப்புவதில் பின்னடைவை கண்டுள்ளனர்.
*ஆசிரியர் – மாணவர் இடைத்தொடர்புகளை சுமூகமாகப் பேணுவதிலுள்ள தடுமாற்றங்கள். முகாமைத்துவத்துடன் புரிந்தணர்வுடன் ஒத்துழைத்து ¸ செயற்படுவதிலான அக்கறையின்மை.
*பொறுப்பக்களை ஏற்பதிலும் – நிறைவேற்றுவதிலும் அற்ப காரணங்களை முன்வைத்து இயலாமையை வெளிப்படுத்தல்
* பெற்றாருடனான இடைத் தொடர்புகளை பேணாமை.
* பெற்றார்களின் கல்வி, சமூக, அறிவு மட்ட தராதரத்திற்கேற்ப தொடர்பாடல்களை மேற்கொள்வதிலான ஆர்வமின்மை.

0 Comments