Subscribe Us

வரலாற்றில் இன்று மே 01

1328 : ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1707 : இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.

1834 : பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.

1840 : உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. 

1891 : பிரான்ஸில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.

1898 : அமெரிக்க கடற்படையினர் மணிலா விரிகுடாவில் ஸ்பானிய கடற்படைக் கப்பலை தாக்கியழித்தனர்.

915 : ஆர்.எம்.எஸ். லூசிட்டாhனியா என்ற கப்பல் தனது 202 அவதும் கடசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.

1925 : சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.

1930 : புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

1931 : நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

1940 : கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.

1945 : சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.

1946 : மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் அவுஸ்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1948 : கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு (வடகொரியா) ஸ்தாபிக்கப்பட்டது. கிம் உல்-சுங் அதன் முதலாவது ஜனாதிபதியானார்.

1961 : கியூபாவை சோசலிச நாடாக அதன் பிரதமர் பிடெல் கஸ்ட்ரோ அறிவித்தார்.

1977 : தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

1978 : ஜப்பானியரான நவோமி யூமுரா, தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதரானார்.

1987 : இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு ஈடித் ஸ்டெயின் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.

1993 : இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா மே தினப் பேரணியின் போது நடத்தப்பட்ட  குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.

2004 : சைப்பிரஸ், செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, மோல்ட்டா, போலந்து, சிலவாக்கியா,, சிலவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
 

Post a Comment

0 Comments