Subscribe Us

எம்.எச். 370யின் வான் வழித் தேடுதல்கள் முடிவுக்கு வந்தது

239 பேருடன் மர்மமான மலேஷிய எயார்லைன்ஸின் எம்.எச். 370 விமானத்தின் வான் வழித் தேடுதல்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டள்ளது.

மர்மான எம்.எச். விமானத்தினை தேடும் பணிகள் 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில ஒரு சிதைந்த பாகமோ எண்ணெய்க் கசிவோ அல்லது ஒரு தடயமோ கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே வான் வழி தேடுதல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை கடலுக்கு கீழான தேடுதல் பிரதேசம் அதிகரிக்கப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்கின்றன.

வான் வழி தேடுதல்கள் முடிவுக்கு வந்த நிலையில் இதுநாள் வரையில் எம்.எச். 370 தேடுதல் பணியில் ஈடுபட்ட வான் வழி தேடுதல் பணியாளர்கள் அனைவரும் விமானங்களுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விடை பெற்றுக்கொண்டனர்.

Post a Comment

0 Comments