Subscribe Us

header ads

புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நடைபாதை அமைத்தல்” எனும் தலைப்பின் கீழ் மிகப்பெரியதொரு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது (PHD :PUTTALAM HUMAN DEVELOPMENT) அமைப்பினர்.

 (TPT)

PUTTALAM HUMAN DEVELOPMENT (PHD)எனும் எமது அமைப்பானது அல்லாஹ்வின் உதவியை கொண்டும்,சகோதர அமைப்புகள்,நலன் விரும்பிகள்,தொண்டு நிருவனங்கள் ஆகியவற்றின் உதவிகளைக் கொண்டும் எமது ஊரில் பல்வேறு சமூக சேவைகள், அபிவிருத்திகள்,உதவிகளை எங்களால் முடிந்த அளவு மேற்கொண்டுவருவது யாவரும் அறிந்த விடயம்.அல்ஹம்துலில்லாஹ்.அந்த அடிப்படையில் எமது  அடுத்த பாரிய வேலைத்திட்டமாக ”புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நடைபாதை அமைத்தல்” எனும் தலைப்பின் கீழ் மிகப்பெரியதொரு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

மையவாடியில் நடைபாதை அமைப்பது மிகவும் தேவையான ஒரு விடயமாகும். தற்போது காணப்படுகின்ற பாதையானது குன்றும்  குழியுமாக காணப்படுவதோடு மழைக்காலக்களில்  சேற்றுப் பகுதியாகவும் காணப்படுகின்றது.இதன் காரணமாக மையத்தினை சுமந்து  கொண்டு அப்பாதையால் செல்வதில் பாரிய சிரமம் ஏற்படுகின்றது.

எனவே இவ்வாறான சிரமங்களை போக்கும் முகமாகவும்,எமது நிரந்தர தங்குமிடத்தினை  அழகுபடுத்துவதற்காகவும்  மேற் கூறிய செயற்திட்டத்தினை  பள்ளிவாசல் நிருவாகத்தின்  அனுமதியுடன் மேற் கொள்ள முடிவுசெய்து ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.
இப்பாதையின் பரப்பு சுமார் 4000 சதுர அடிகளாகும்.ஒரு சதுர அடிக்கான அண்ணளவான செலவு 200 ரூபாவாகும்.எனவே இதற்கான உத்தேச மொத்த செலவு 800,000 ரூபா.இவ் மிகப்பெரிய பணத்தொகையை சேகரிப்பதில் பாரிய சிரமம் காணப்படுகின்றது .

எனவே இவ் தொகையினை சேகரிக்கும் முகமாக 200 ரூபா பெருமதியான 4000 டிக்கட்டுகள் எம்மால் அச்சிடப்பட்டு விணியோகிக்கப்பட்டு வருகின்றது.இவ் டிக்கட்டுக்களை மணமுவந்து கொள்வனவு செய்வதோடு மேலதிகமாகவும் முடியுமான அளவு பண உதவியை தந்து உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.அத்துடன் இத் தகவலை உங்கள்   நண்பர்கள்,உறவினர்கள்,வெளிநாடுகளில் வாழும் சகோதரர்கள், அமைப்புகள், நிருவனங்களுக்கு தெரியப்படுத்தி உங்களால் முடிந்த பண உதவிகளை பெற்றுத்தருமாரும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.ஜெஸாக்கல்லாஹு ஹைரன்.

மேலதிக தொடர்புகளுக்கு
Mohamed Jahas - 0775678902
Mohamed Nibras - 0711978308
Mohamed Iksab - 0772944399



Post a Comment

0 Comments