Subscribe Us

header ads

கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு


 
கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக பாதையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
 
இலங்கையின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையாக கருதப்படும் கொழும்பு - கட்டுநாயக்க  அதிவேக  பாதையில் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இதுவரையில் 130 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது. இந்நிலையில் நேற்றிலிருந்து குறித்த கட்டணத்தை 10 ரூபாவாக்குறைத்து 120 ரூபாவாக அறவிடப்பட்டு வருகிறது. 

Post a Comment

0 Comments