மாயமான மலேசிய விமானமான எம்.எச்.370ஐ தேடும் பணியில் ஈடுப்பட்டிருந்த
குழுவினருக்கு விமானத்தின் கறுப்பு பெட்டியின் ஒலி சமிக்ஞை கேட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த ஒலி சமிக்ஞை திங்கட்கிழமை(07)கண்டறியப்பட்டுள்ளதாக தேடுதல் நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் அவுஸ்திரேலிய நிறுவனம் அறிவித்துள்ளது.
சுமார் 4500 மீற்றர் ஆழத்தில் இருந்து இந்த ஒலி சமிக்ஞை பெறப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி எயாமார்ஷல் அங்குஸட் ஹீஸ்டன் தெரிவித்துள்ளார்.
சமிக்ஞை கிடைக்கும் இடத்தை தாம் திரையில் பார்த்ததுடன் கறுப்பு பெட்டியிலிருந்து வரும் ஒலியினையும் கேட்க முடிந்துள்ளதாகவும், அந்த இடத்தினை தாம் நெருங்கி விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஒரிரு தினங்களின் கருப்பு பெட்டியின் மின்கலம் செயலிழந்துவிட கூடிய சந்தர்ப்பம் இருப்பதால், கறுப்பு பெட்டியினை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments