மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரின் 7ஆவது தொடரின் முதல் போட்டியில் மும்பை- கொல்கத்தா அணிகள் நேற்று அபுதாபியில் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி முதலில்
துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள்
எடுத்தது.
ஜக் கலீஸ் அரைச்சதம் கடந்து 72 ஓட்டங்களையும் மனிஷ் பாண்டே 64
ஓட்டங்களையும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் லசித் மலிங்க 4
விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் மட்டுமே
எடுத்து 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
ஆதித்யா தாரே 24 ஓட்டங்களையும் அம்பத்தி ராயுடு 48 ஓட்டங்களையும் ரோகித் சர்மா 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்
போட்டியின் ஆட்டநாயகனாக கொல்கத்தா அணியின் ஜக் கலீஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
0 Comments