Subscribe Us

header ads

‘The Puttalam Times’ இன் முதலாம் வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் வைபவம்.

 ‘The Puttalam Times’ இன் முதலாம் வருட பூர்த்தியை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மார்ச் 14, 2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 8.00 மணி முதல் 9.30 மணிவரை புத்தளம், மரைக்கார் வீதி, Global College இல் வைபவம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புத்தளம் பிரதேச செயலாளர் கௌரவ எம்.ஆர்.எம். மலிக் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இவ் வைபவத்தின் போது, ‘The Puttalam Times’மின்நூல் (E-magazine) வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன்,‘The Puttalam Times’முகநூல் குழுமத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வினா-விடைப் போட்டி ‘ Wiz Times i ’இல் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் Friends of Insight(புத்தளம் வட்டம்) வர்த்தகர்களுக்காகநடத்தப்பட்ட Primary Course in Effective Emailing and Social Media for Business Promotion’கற்கை நெறியில் பயிற்சி பெற்றவர்களுக்குசான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

மேற்படி வைபவத்திற்கான மின்னழைப்பிதழை (E-invitation) இணைத்துள்ளோம். இவ் அழைப்பிதழை ஏற்று வைபவத்திற்கு வருகைத் தருமாறு தோழமையன்புடன் அழைக்கின்றோம்.

‘ஊடகக் குடும்பத்தின் உறவுகள் நெருக்கமாகட்டும்!’

ஜஸாகல்லாஹ்

இவ்வண்ணம்,

நிர்வாகம்

‘The Puttalam Times’


Post a Comment

0 Comments