Subscribe Us

header ads

// The Puttalam Times சமூக ஊடக பயில்நெறி \\

(Hisham Hussain T.P.T)
சமூக ஊடகங்களை (Social Media) பயன்படுத்துவோருக்கு, பாதுகாப்பானதும் வினைத்திறன்மிக்கதுமான மின்னஞ்சல் மற்றும் முகநூல் பாவனை தொடர்பாக அறிவூட்டி அவர்களை வலுவூட்டும் நோக்கில், சிறப்புப் பயில்நெறியொன்றை The Puttalam Times ஏற்பாடு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
*காலம்: ஏப்ரல் 18, 2014 வெள்ளிக்கிழமை
*நேரம்: மாலை 3.30 முதல் 6.00 வரை

*இடம்: Global College, Marikkar Street, Puttalam

*பதிவுக் கட்டணம்: 250.00

பயில்நெறியில் கற்க விரும்புவோர், எதிர்வரும் 14.04.2014 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் தகவல்களை:

* முகநூல் பெயர் (Facebook ID)

* நிஜப் பெயர் முன்னெழுத்துக்களுடன் (சான்றிதழில் எழுதுவதற்கு)

* கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு,

Subject இல் Workshop 1 என் எழுதி,

TPT யின் மின்னஞ்சல் theputtalamtimes@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.
‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ First Come First Serve என்ற அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள்.

பயில்நெறியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
இப் பயில்நெறி Gmail அடிப்படையாக வைத்து கற்பிக்கப்படும் என்பதால், வேறு மெயில்களை பாவிப்பவர்கள் இதற்கென பிரத்யோகமாக Gmail ஒன்றைத் திறந்துகொள்ளும்படி வேண்டப்படுகின்றீர்கள்.

ஆண் பெண் இருபாலாரும் பங்குபற்றலாம்.



Post a Comment

0 Comments