நீண்ட நேரம் நீடித்த சண்டையின் இறுதியில் முதலையை இறுக்கிப்பிடித்த பாம்பு பின்னர் அதனை விழுங்கியுள்ளது.
குயீஸ்லாந்தின் இசா மலைப்பகுதியில் உள்ள மூண்டரா வாவியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனை உள்ளூர்வாசி ஒருவர் நேற்று படம் பிடித்துள்ளார்.
சுமார் பத்து அடி நீளமான மலைப்பாம்பு ஒன்றே முதலையை விழுங்கியுள்ளது.
நீரில்
நீண்ட நேரம் இடம்பெற்ற சண்டையை தொடர்ந்து முதலையை கொன்ற குறித்த
மலைப்பாம்பு அதனை கரைக்கு கொண்டுவந்த பின்னர் விழுங்கியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
டிபெனி கோலிஸ் என்பவரே இதனை பதிவு செய்துள்ளார்.
முதலில் முதலையின் உடலை இறுக்கி சுற்றிய மலைப்பாம்பு பின்னர் தனது பிடியை இறுக்கி அதனை கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் சுமார் 5 மணித்தியாலங்கள் நீடித்ததாக தெரிவித்த அவர், உயிரிழந்த முதலையை உண்பதற்கு மலைப்பாம்பிற்கு சுமார் 15 நிமிடங்கள் தேவைப்பட்டதாக கூறியுள்ளார்.
முதலையை விழுங்கிய பின்னர் குறித்த பாம்பு எங்கு சென்றது என்பது குறித்து தனக்கு தெரியாது என அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments