Subscribe Us

header ads

உ/த பரீட்சை 2014; 28 வரை விண்ணப்பிக்கலாம்


2014ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி இம்மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபரினூடாகவும் தனிப்பட்ட ரீதியில் விண்ணப்பிப்போர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு தங்களது விண்ணப்பங்களை நேரடியாக கையளிப்பதனூடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments