ஹஜ் மற்றும் சுற்றுலா விசாவில் மத்திய
கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்ல வேண்டாம் என இலங்கை
பிரஜைகளுக்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹஜ் மற்றும் சுற்றுலா விசாவில் சென்று வேலை செய்பவர்களுக்கு ஏற்படும்
பிரச்சினைகளுக்கு பொறுப்புக் கூற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது சமீபகாலமாக எதிர்நோக்கும் புதிய பிரச்சினை என இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரன்தெனிய
குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுகளில் வேலை செய்யும் இலங்கையர்களது நலன்கள் தொடர்பில் வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகம் அக்கறை கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மில்லியன் வரையான இலங்கை பணியாளர்கள் உள்ளதாகவும் ரன்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments