டொக்டர். எம்.சென்னியப்பன்
MD (Gen.Med) DM (Cardiology) FRCP (Gla), FACC, FCSI, FISE, FIAE, FAPSC.
உடல் அவயவங்களுக்குத் தேவையான சக்தியைத் தொடர்ச்சியாக வழங்கிவரும்
இதயத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிவது இதயத் தசைகள்தான். இந்தத்
தசைகளுக்கு சக்தியை வழங்கவென்று பிரத்தியே கமான இரத்தக்குழாய்கள்
இருக்கின்றன. அந்த இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற் பட்டு, இதயத்
தசைகளுக்கான இரத்த ஓட் டம் தடைப்பட்டு, அந்தத் தசைகள் பழுத டைவதையே
மாரடைப்பு என்கிறோம். ஒரு முறை அந்தத் தசைகள் பழுதாகி மாரடைப்பு
ஏற்பட்டுவிட்டாலே, அங்கு நிரந்தரமாகப் பிரச்சினைகள் குடியேறிவிடும். அந்தத்
தசைகளை மீண்டும் சீரமைக்க முடியாது. ஆகையால், மாரடைப்பு நோய் வருமுன்,
அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுப்பதே சிறந்தது.
மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய கார ணிகளுள் மிக முக்கியமானவை ஆறு.
1. புகையிலை பாவனை.
2. அதீத இரத்த அழுத்தம்
3. நீரிழிவு நோய்
4. கொழுப்பின் அளவு
5. தொப்பை மற்றும் உடல் பருமன்
6. மன உளைச்சல்
சிகரெட்டில் நிக்கோட்டின் உட்பட பல நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த
நிக்கோட்டின், இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டுசெல்லும் இரத்தக் குழாயைச்
சுருக்கிவிடுகிறது. இதனால்தான் புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்புக்கான
வாய்ப்புகள் மிக அதிகம். அதுமட்டுமல்ல. புகைபிடிப்பதால், மேலே கூறப்பட்ட
ஏனைய ஐந்து காரணிகளும் தாமாகவே எட் டிப் பார்க்கின்றன.
இரத்த அழுத்தம் ஒரு மௌன உயிர் கொல்லி. ஏனெனில், இது தம் உடலில் இருக்கிறது
என்பதை எவராலும் இலகுவாக அறிந்துகொள்ள முடியாது. அறிகுறியும் காட்டாது.
ஆனால் இது விஸ்வரூபம் எடுக் கும்போது, உடனடியாக உடலின் ஐந்து முக்கிய
உறுப்புகளான மூளை, கண்கள், இருதயம், சிறுநீரகம் மற்றும் இரத்தக் குழாய்கள்
என்பவற்றைத் தாக்கும். ஆகை யால், சீரான கால இடைவெளியில், இரத்த
அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள் வதன் மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இரத் தத்தில் அதிக சர்க்கரை சேருமானால்,
அது இருதயத் தசைகளைப் பாதிக்கலாம். அல் லது இருதயத்துக்குச் செல்லும்
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பின் அளவை
அதிகப்படுத்தலாம். இரத்த அழுத்தத்தை உண்டாக்கலாம். இவை மாரடைப்பை
உண்டாக்கிவிடும்.
அடுத்து கொழுப்பு. கொழுப்பில் ஐந்து விதமான கொழுப் புகள் உண்டு. அவற்றுள்,
எல்.டி.எல். என்பது (Low-density lipoprotein) கெட்ட கொழுப்பு.
எச்.டி.எல். என்பது (High-density lipoprotein) நல்ல கொழுப்பு. உட லில்
நல்ல கொழுப்பின் அளவு, கெட்ட கொழுப்பைவிட அதிகமாக இருக்க வேண் டும். இதற்கு
மிக அவசியமானவை, உண வுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி. உண வுக்
கட்டுப்பாட்டைப் பொறுத்தளவில், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த பதார்த் தங்களை
விலக்கவேண்டும். சமையலுக்காக சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்,
கடலெண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன் றவற்றைப் பயன்படுத்தலாம். அதுவும் இவற்றை
வாரந்தோறும் ஒன்று மாற்றி ஒன் றைப் பயன்படுத்துவதால், இவை ஒவ்
வொன்றிலுமுள்ள தனித்துவமான குணங் கள் பூரணமாகக் கிடைக்கும். ஆனால் எந்த
எண்ணெய் ஆயினும் பொரிப்பது ஆகாது.
இறுதியாக மன உளைச்சல். நீங்கள் வேகமாக நடக்கிறீர்கள் என்று வைத்துக்
கொள்வோம். பத்து நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும்போது, இரத்த அழுத்தம்,
சாதாரண நிலையான 120லிருந்து படிப்படியாக 160, 180 என்று கூடிச் செல்லும்.
ஆனால், உங்க ளுக்குள் ஏற்படும் கோபம் அல்லது கவலை யால், உங்கள் இரத்த
அழுத்தம் ஒரே நொடி யில் உச்சத்தை எட்டுகிறது. சாதாரண நிலை யில் இயங்கும்
இருதயம், சடுதியாக வேக மாக இயங்கவேண்டி ஏற்பட்டால், அது செயலிழக்கிறது.
இதனால்தான், பலரும், கடுமையான மன உளைச்சலின்போது, இரு தயம் செயலிழந்து
மரணத்தைத் தழுவுகி றார்கள்.
இதைத் தவிர்ப்பதற்கு மனதுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும். யோகா, தியா னம், இனிமையான இசை, நேர்மறைச் சிந் தனை கள் என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ளப் பழகிவிட்டால், மன உளைச்ச லால் மாரடைப்பு என்ற ஒன்று உங்களை ஒருபோதும் அண்டாது.


0 Comments