(ஜே.எம்.ஹாபீஸ்)
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற வருடா வருடம் பலர் புனித மக்கா செல்வதுண்டு. அது தவிர இடைக்கிடை வருடம் தவறாது உம்ராக்களையும் நிறைவேற்றும் பலர் எம்மில் இருக்கிறார்கள். இப்படியானவர்களுக்கு ஒரு படிப்பிணை ஏற்படுத்தும் நோக்கில் உடதலவின்னையைச் சேர்ந்த ஜே.எம்.இஸ்மாயில் என்பவர் 'ருஸ்பதுஸ் ஸாவீ' என்ற நூலில் இருந்து திரட்டிய ஒரு விடயத்தை கீழே தருகிறோம்.
மாபெரும் மேதையான ரபிய் இப்னு சுலைமான் (றஹ்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கூட்டத்தாருடன் ஹஜ் செய்யப் புறப்பட்டுள்ளார். அங்கு அவர் கண்ட ஒரு காட்சி பின் வருமாறு-
நான் ஹஜ் செய்வதற்கு புறப்பட்ட போது என்னுடன் ஒரு ஜமாஅத் இருந்தனர். நாம் கூபா நகருக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்க முற்பட்டோம். அங்கு ஒரு ஆச்சரியமான காட்சியைக் கண்டேன். பாழடைந்த இடமொன்றில் கோவேறு கழுதை ஒன்று இறந்து காணப்பட்டது. ஒரு கிழவி இறந்த கழுதையின் மாமிசத்தைக் கத்தி ஒன்றால் துண்டு துண்டாக்கி ஒரு கூடையில் சேகரித்துக் கொண்டிருந்தாள். அவள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவள் ரொட்டி சுட்டு இதனையும் சமைத்து பொதுமக்களுக்கு விற்கும் ஒருத்தியாக இருக்க வேண்டும். அப்படியான ஒன்றாயின் நான் கண்டும் காணாதது போல் இருக்க முடியாது. என நினைத்து அவள் அறியாத வகையில் அவளைப் பின் தொடர்ந்தேன்.
அவள் ஒரு வீட்டை அடைந்து கதவைத் தட்டினாள். யாரது என்று சத்தம் அங்கிருந்து வந்தது. அபாக்கியவானான நான்தான் வந்துள்ளேன் என்று அவள் பதில் கூறினாள். அப்போது கதவு திறக்கப்பட்டது. அங்கு பருவமடைந்த நான்கு பெண்கள் நின்றார்கள். அவர்கள் முகங்கள் வாடிக் காணப்பட்டன. வீடு பழுதடைந்த நிலையில் இருந்தது. கிழவி கதவை மூடிக் கொண்டாள். நான் கதவு இடுக்கின் வழியே உள்ளே நடப்பவற்றை அவதானித்தேன்.
கிழவி அழுதுகொண்டு பின்வருமாறு கூறினாள். 'இதோ இதை சமைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். அல்லாஹ்விற்கு தனது அடியார்கள் மீது சகல அதிகாரங்களும் உண்டு. அவனது ஆதிக்;கத்தின் கீழ்த்தான் அனைவரின் இதயங்களும் உள்ளன' என்று கூறினாள். குமரிப் பெண்கள் அம்மாமிசத் துண்டுகளை சமைக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட எனக்கு மன வேதனை தாங்க முடியவில்லை. எனவே நான் பின்வருமாறு வெளியே இருந்து குரல் கொடுத்தேன். 'ஏ.. அல்லாஹ்வின் அடியானே! அதைச் சாப்பிடாதே!' என்றேன். அதற்கு 'நீயார்' என்று கிழவி கேட்டாள். 'நான் ஒரு பரதேசி' என்றேன்.
'ஏ பரதேசி மனிதனே எங்களிடமிருந்து நீ என்ன எதிர் பார்க்கிறாய்? நாங்களோ விதியின் வசத்ததால் சிக்கி, கைதிகளாகி இருக்கிறோம். மூன்று வருடமாக எமக்கு உதவி செய்ய யாரும் இல்லை. அப்படி இருக்க எங்கனிடமிருந்து நீ என்ன எதிர் பார்க்கிறாய்?' என்று அவள் கேட்டாள்.
'செத்த மிருகத்தின் மாமிசத்தை உண்பதற்கு மஜூசிகளின் ஒரு கூட்டத்தைத் தவிர வேறு எவருக்கும் அனுமதிக்கப் படவில்லை' என்றேன்.
அதற்கு அவள் சொன்னாள் 'நாம் முஹம்மத் (ஸல்) அவர்களது பரம்பரையில் வந்த உயர் குடும்பத்தைச் சேர்ந்த ஸையதுகள் ஆவோம். இப் பெண்களின் தந்தை உயர்ந்த அந்தஸ்து உடையவராக இருந்தார். அவரைப் போல் உயர்ந்த குடும்பத்திற்கு தனது மகள் மார்களை விவாகம் செய்து கொடுக்க விரும்பினார். ஆனால் அதற்கு முன் அவர் மரணமடைந்து விட்டார். அவர் விட்டுச் சென்ற பொருட்களும் செலவாகி விட்டன. இறந்த பிராணிகளைச் சாப்பிடக் கூடாது என்று எமக்குத் தெரியும். ஆனால் கடுமையான நிர்ப்பந்த்தின் பேரில் அதுவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாம் நான்கு நாட்களாகப் பட்டினியாக
இருக்கிறோம்' என்றாள்.
இச்சம்பவத்தைக் கேட்ட நான் அழுதவனாக மன நிம்மதி அற்றவனாக அங்கிருந்து திரும்பினேன். எனது சகேதரர்களிடம் கூறினேன் எனக்கு ஹஜ் செய்ய மன நிலை சரியில்லை என்று. அவர்கள் எனக்கு பல்வேறு ஆருதல் வாhத்தைகள் கூறினர். ஹஜ்ஜின் சிறப்புக்களை தாராளமாக எடுத்துக் கூறினர்.
நான் எனது இஹ்ராம் துணிமணிகளை சுருட்டி எடுத்துக் கொண்டு என்னிடம் இருந்து 400 திர்ஹம்களில் 100 திர்ஹம்மிற்கு மாவு வாங்கி மிகுதிப் பணத்துடன் அனைத்தையும் அக்கிழவிக்கிக்கு கொடுத்துவிட்டேன்.
அப் பெண் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவளாக 'அல்லாஹூத்தஹாலா உமது முன் பின் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பானாக. உமக்கு ஹஜ் செய்த நன்மையை இறைவன் தருவானாக. சுவர்க்த்தில் உமக்கொரு இடத்தை அல்லா தருவானாக. இவ் உதவி hரணமாக உமக்கு எத்தகைய பிரதி பலன் கிடைக்கிறதோ அது வெளிப்படையாகத் தெரியும்படி இறைவன் ஆக்குவானாக.' எனப் பிராத்தித்தாள்.
அப்பெண்ணின் மூத்தமகள் பின் வருமாறு பிராத்தித்தாள். 'அல்லாஹ் உமக்கு நற்கூலியைப் பன்மடங்கு அதிகரித்துத் தருவானாக. உமது பாவங்களை மன்னிப்பானாக' என்று.
இரண்டாவது மகள் 'இவர் எமக்கு அளித்ததை விடப் பன்மடங்கு அல்லாஹ் நீ இவருக்கு அளிப்பாயாக'என்று பிராத்தித்தாள்.
மூன்றாவது மகள் ' யா அல்லாஹ் மறுமைநாளில் எமது பாட்டனார் அன்னல் முஹம்மது (ஸல்) அவர்களுடன் ஒன்றாய் இருக்கும் பாக்கியத்தை அருள்வாயாக'என்று பிராத்தித்தாள்.
இளைய மகளான நான்காவது மகள் 'யா அல்லாஹ் எம்மீது கருணை காட்டியவருக்கு மிக வேகமாக நீ அழகான முறையில் கைமாறு செய்வாயாக. அவருடைய முன் பின் சகல பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக' எனப் பிராத்தித்தாள்.
மேதை ரபீய் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்-
ஹஜ் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். மேற்படி சம்பவம் காரணமாக தமக்கு அதில் பங்கெடுக்க முடியாது போய்விடடதது. நான் கூபாவில் தங்க வேண்டி ஏற்பட்டது. சிறிய கால இடைவெளியில் மக்காவில் இருந்து ஹாஜிகள் வெளியேற ஆரம்பித்தனர். அப்படி வெளியேறும் யாரிடமாவது எனக்காக துவாச் செய்யும்படி கேட்க வேண்டும். அவர்கள் யாராவது ஒருவரின் துவா அங்கீகரிக்கப்பட்டால் எனக்கு நல்லது என்ற நோக்கில் யாராவது ஹாஜிகளைச் சந்திக்கலாம் எனக் கருதிச் சென்றேன். ஒரு ஹஜ் குழுவைக் கண்டதும் எனக்கு ஹஜ் செய்ய கிடைக்கவில்லையே என்ற கவலையில் எனது கண்களில் கண்ணீர் வடிந்தது. அவர்களுக்காக நான் பிராத்தித்தேன். உங்களது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. நீங்கள் செலவழித்தற்கு நற்கூலியை அல்லாஹ் அருள்வானாக எனவாழ்த்திப் பிராத்தித்தேன்.
அப்போது அக் கூட்டத்தில் ஒருவர் இந்த துஹா எப்படிப்பட்டது என்று கேட்டார். நான் அதற்கு ஹஜ்ஜின் வாசல்வரை சென்றும் அதனை அடையும் பாக்கியத்தை இழந்தவினின் துவா என்றேன். உடனே அவர் 'இது என்ன? ஆச்சரியமாக அல்லவா உள்ளது. நீர் ஹஜ் செய்தததை மறுக்கிறீரே. அரபாத் வெளியில் நீர் எம்முடன் இருக்கவில்லையா? நீர் எங்களுடன் சேர்ந்து சைத்தானுக்குக் கல் எறிய வில்லையா? நீர் எங்களுடன் தவாப் செய்யவில்லையா? என்று ஏதோ அடுக்கிக் கொண்டே போனார்.
சிறிது நேரத்தில் எனது ஊரைச் சேர்ந்த ஹஜ் குழுவினரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் சென்று உங்கள் முயற்சிக்கு அல்லா உரிய கூலியைத் தருவானாக. உங்கள் ஹஜ்ஜை அவன் ஏற்றுக் கொள்வனாக.' என்று கூறினேன்.
அவர்களும் முன்பு சொன்னவர்போன்றே 'நீங்களும் அரபாத் மைதானத்தில் எம்முடன்தானே இருந்தீர்கள். எம்முடன்தானே சைத்தானுக்கு கல் எறிய வந்தீர்கள். இப்போது ஹஜ் செய்யவில்லை என்று ஏன் மறுக்கிறீhகள்' என்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் வந்து ஏன் சகோதரரே ஹஜ் செய்யவில்லை என்று மறுக்றீர்கள். நீங்கள் அப்படிக் கூறக் காரணம் என்ன? நீங்ள் எங்களோடுதானே மக்காவில் இருந்தீர்கள். மதீனாவிலும் இருந்தீர்கள். சியாரத் செய்து விட்டு பாபே ஜிப்ரீல் வாசலால் வெளியேறும் போது அதிக ஜன நெறிசல் காரணமாக இந்தப் பையை என்னிடம் அமானிதமாக ஒப்படைத்தீர்களே. அதை நீங்கள் என்னிடம் கொடுக்க வில்லையா? அதன் வாயில் முத்திரை ஒட்டப்பட்டு அதில் 'மன் அமலனா ரபிய்' (எமக்காகச் செயல்பட்டவர் இலாபமடைவார்) என்று எழுதப்படடிருந்ததே என்றார். இதோ உங்களுடைய பையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.' என்று கூறி அதனை என்னிடம் ஒப்படைத்தார்.
ஹழ்ரத் ரபீய் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 'நிச்சயமாக அந்தப்பையை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. அதனை வாங்கிக் கொண்டு திரும்பினேன். பின்னர் வழமை போல் இஷா தொழுகையை முடித்து விட்டு நான் வழமையாக ஓதும் ஓதல்ககளை ஓதிக் கொண்டிருந்தேன். பின்னர் நடந்த சம்பவம் என்ன என்று சிந்pத்துக் கொண்டிருக்கும் போது நித்திரையாகி விட்டேன்.
கனவில் அருமை நாயகம் (ஸல்) அவர்களை தரிசித்தேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்களும் முகம் மலர்ந்தவராக பதில் ஸலாம் கூறினார்கள். அத்துடன் ரஸூல்(ஸல்) கூறினார்கள். ஏ! றபீய்யே நீ ஹஜ் செய்தாய் என்பதற்கு எத்தனை சாட்சிகளை நாம் நியமிப்பது. நீயோ அதனை நம்பமாட்டேன் என்கிறாயே. இதோ கேள். எனது வம்சாவழியான அப் பெண்ணுக்கு ஸதகா செய்து விட்டு உன்னுடைய வழிப் பயணத்திற்கான பணத்தை முற்றாக கொடுத்து விட்டு ஹஜ்ஜை பின் தள்ளிப் போட்டாய். அதன் காரணமாக இதற்குப் பகரமாக ஒன்றை உனக்கு அல்லாஹ் தரவேண்டு மென்று துவாச் செய்தேன்.
அல்லாஹ் ஒரு மலக்கை உன்னுடைய உருவத்தில் ஆக்கி ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்யும்படி ஆக்கியுள்ளான். கியாமத்து நாள் வரை உன் சார்பாக அந்த மலக்கு ஹஜ் செய்ய உத்தரவிட்டுள்ளான். மேலும் உலகில் அந்த 400 திர்ஹம்மிற்குப் பதிலாக 400 தீனார்களை(பொற்காசுகளை) அளித்துவிட்டான். என்று கூறிவிட்டு பணப்பையில் எழுதப்பட்டிருந்த அதே வாhத்தைகளான 'மன் அமலனா ரபீஅ' என்று கூறி மறைந்து விட்டார்கள். நித்திரை விட்டு எழுந்து நான் அந்தப்பையைத்திறந்து பார்த்தேன் 400 தீனார் இருந்தது.
ஆதாரம்- 'ருஸ்பதுஸ் ஸாவீ'இ தகவல்- ஜே.எம்.இஸ்மாயில்

0 Comments